இளங்கோவன் மகன் மீது போலீஸ் வழக்கு

Subscribe to Oneindia Tamil

ஈரோடு:

மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் தென்றல் மணியைத் தாக்கியவழக்கில் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீது ஈரோடு போலீஸார்வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஈரோட்டைச் சேர்ந்தவர் தென்றல் மணி. இவர் மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளராக உள்ளார். சில நாட்களுக்கு முன்பு ஈரோட்டில் இளைஞர் காங்கிரஸ்செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்திற்கு மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், மாநிலஇளைஞர் காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தபோது தென்றல் மணியை சிலர் கடுமையாகதாக்கினர். இதில் படுகாயம் அடைந்த மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுசிகிச்சை பெற்றார்.

அமைச்சர் இளங்கோவனின் மகன் ஈவேரா திருமகன் உள்ளிட்டோர்தான் ஒருஇடத்தில் அடைத்து வைத்து கடுமையாக தாக்கியதாக வீரப்பன்சத்திரம்காவல்நிலையத்தில் மணி புகார் கொடுத்தார்

சம்பவம் நடந்து பல நாட்களாகியும் இந்த புகார் தொடர்பாக போலீஸ் தரப்பில் எந்தநடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது. இந்த நலையில் திருமகன் உள்ளிட்ட 5பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+