மாமியார் கொலை வழக்கிலும் மேரி, தாஸ் கைது:தாத்தாவையும் கொன்றாரா தாஸ்?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை மாதவரம் வழக்கறிஞர் அருள்நாதன் கொலை வழக்கில் கைதாகியுள்ளஅவரது மனைவி மேரியும், கள்ளக்காதலன் ஆரோக்கிய தாஸும், அருள்நாதனின்தாயார் சவுரியம்மாளைக் கொன்ற வழக்கிலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே ஆரோக்கியதாஸ் ஏற்கனவே தனது தந்தையையும் தூக்க மாத்திரைகொடுத்து கொன்றுள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

வழக்கறிஞர் அருள்நாதனை, அவரது மனைவி மேரியும், கள்ளக்காதலன் ஆரோக்கியதாஸும் சேர்ந்து கொலை செய்த பரபரப்பே விலகாத நிலையில், அருள்நாதனின்தாயார் சவுரியம்மாளையும் இவர்கள் இருவர்தான் திட்டமிட்டுக் கொன்றதாகஇன்னொறு பரபரப்பு ஏற்பட்டது.

சவுரியம்மாள் அருள்நாதனின் வீட்டில் கடந்த மாதம் குளியலறையில் வழுக்கிவிழுந்ததாக கூறப்பட்டது. ஆனால் உண்மையில் தாஸ்தான் சவுரியம்மாளை அடித்துக்கொன்றுள்ளார்.

இதற்கு மேரியும் உடந்தையாக இருந்துள்ளார். பின்னர் வழக்கி விழுந்து இறந்துவிட்டதாக கணவரிடம் மேரி நாடகமாடியுள்ளார். இதைத் தொடர்ந்து சவுரியம்மாள்அடக்கம் செய்யப்பட்ட இடத்தைத் தோண்டிய போலீஸார் அவரது உடல் பாகங்களைபரிசோதனைக்கு அனுப்பினர்.

மேலும் சவுரியம்மாள் மரணம் தொடர்பாக பல்வேறு தகவல்களையும் போலீஸார்திரட்டினர். இதில் அவர் கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் சிக்கியதாகதெரிகிறது.

மேலும், தாஸும், மேரியும், தாங்கள்தான் சவுரியம்மாளை கொலை செய்ததாகஒப்புதல் வாக்குமூலம் அளித்தனர். இதைத் தொடர்ந்து இருவர் மீதும்சவுரியம்மாளைக் கொலை செய்த குற்றத்திற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டுதற்போது அந்த வழக்கிலும் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, இன்று காலை விசாரணைக்காக இருவரையும் போலீஸார் மாதவரம்காவல் நிலையத்திற்குக் கொண்டு வந்தனர். அவர்களைப் பார்க்க போலீஸ் நிலையம்முன்பு பெரும் திரளான மக்கள் கூடியிருந்தனர்.

பின்னர் மேரியை மட்டும் அருள்நாதன் வீட்டுக்குப் போலீஸார் அழைத்துச் சென்றனர்.அங்கு சவுரியம்மாளைக் கொன்றது எப்படி என்பதை மேரி விளக்கிக் கூறினார். அதைபோலீஸார் வீடியோவில் படமாக்கினர்.

பின்னர் காவல் நிலையத்திற்கு மீண்டும் மேரி அழைத்துச் செல்லப்பட்டார்.

தாத்தாவையும் கொன்ற தாஸ்!

இதற்கிடையே ஆரோக்கியதாஸ் ஏற்கனவே தனது தாத்தா மரியண்ணனையும் கொலைசெய்துள்ளார் என்ற திடுக்கிடும் தகவலை அருள்நாதனின் தம்பி ராயப்பன் என்றசிங்காரம் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், தாஸ் எனது அண்ணன் மற்றும் தாயாரை மட்டும்கொல்லவில்லை. அதற்கு முன்பு அவனது தாத்தா மரியண்ணனையும் அவன்தான்கொன்றான்.

தாத்தாவிடம் அடிக்கடி பணம் கேட்டு மிரட்டுவான். அவரும் பயந்து போய்வங்கியிலிருந்து எடுத்துக் கொடுப்பார். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறைஇப்படித்தான் பணம் கேட்டு மிரட்டினான்.

இம்முறை பயப்படாத மரியண்ணன், இதுகுறித்து உறவினர்களிடம் கூறி விடுவேன்என்று பதிலுக்கு மிரட்டினார். இதனால் கோபமடைந்த தாஸ், அவருக்கு மருந்துடன்தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்து விட்டான்.

இதனால் அவர் மயக்க நிலைக்குப் போய் கோமாவில் விழுந்தார். பின்னர் நினைவுதிரும்பாமலேயே கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார்.

இது அருள்நாதனுக்குத் தெரியும். ஆனாலும், உறவினராயிற்றே என்பதால் தாத்தாகோமாவில்தான் இறந்தார் என்று கூறிதாஸைக் காப்பாற்றி விட்டார்.

இதேபோல கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணமாகி 2 குழந்தைகளுடன் இருந்தஒரு பெண்ணைக் கடத்திக் கொண்டு போய் திருப்பத்தூரில் வைத்துக் குடும்பம்நடத்தினான் தாஸ்.

அந்தப் பெண்ணின் உறவினர்கள் போலீஸில் புகார் செய்து விட்டனர். போலீஸாரிடம்அருள்நாதன் தான் கெஞ்சிக் கூத்தாடி, அந்தப் பெண்ணை மீட்டு அவரதுஉறவினர்களிடம் ஒப்படைத்தார்.

தாஸையும் காப்பாற்றினார். இப்போது அருள்நாதனையேக் கொன்று விட்டான் தாஸ்என்றார் ராயப்பன் கண்ணீர் மல்க.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+