கள்ள நோட்டு ஜனனி-மாட்டுவாரா அந்த விஐபி

Subscribe to Oneindia Tamil

மதுரை:

ஜனனி விவகாரத்தில் அந்த விஐபியின் நடவடிக்கைகளை உளவுப் பிரிவு போலீசார் தீவிரமாக கண்காணித்துவருகின்றனர்.

ஆடல் சுவாமி பெயர் கொண்ட அந்த விஐபிக்கு மிக வேண்டியரான ஜனனி கஞ்சாவில் ஆரம்பித்து இப்போதுகள்ள நோட்டு வழக்கில் சிக்கியுள்ளார்.

ஜனனிக்கு உதவ அந்த விஐபி தீவிர முயற்சிகள் எடுத்து வருவதாகத் தெரிகிறது. கடந்த வாரத்தில் மதுரையில்ரகசியமாய் முகாமிட்ட அவர் வழக்கறிஞர்களுடன் இந்த வழக்கு குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.இதையடுத்து அவரது நடவடிக்கைகளை உளவுப் பிரிவினர் கண்காணிக்க ஆரம்பித்துள்ளனர். இந்த வழக்கில்உரிய ஆதாரங்கள் சிக்கினால் அவரையும் வளைக்க போலீசார் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

கள்ள நோட்டு விஷயத்தில் அவரிடமும் விசாரணை நடத்தினால் அது முக்கிய கட்சிக்கு பெரும் சிக்கலாகஅமையும் என ஆளும் தரப்பு கருதுகிறது.

இந் நிலையில் விஐபிக்கு வேண்டிய ஜமீன்தார் ஜெகதீஷ் ராஜா (பணம் இவருடையது என ஜனனி கூறியிருந்தார்),அவருக்கு பணம் தந்த டெல்லி ஆடிட்டர் ரவி சோப்ரா, அவரது நண்பர் அதுல் திவாரி ஆகியோரிடமும் கள்ளநோட்டுக்கள் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்துவர் என்று தெரிகிறது.

இதற்கிடையே இந்த கள்ள நோட்டு விவகாரத்தில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சில முக்கிய தலைகளும்சிக்கலாம் என்று கூறப்படுகிறது. அந்த தமிழக விஐபிக்கு உத்தரப் பிரதேச அரசியலின் விவிஐபிக்களிடம்ரொம்பவே நெருக்கம் உண்டு. அடிக்கடி அங்கு போய் வருவார். அவர்களது பணத்தை தென் மாநிலங்களில்முதலீடு செய்து தந்து பாதுகாப்பது அவரது முக்கிய வேலைகளில் ஒன்று.

இதனால் உ.பி அரசியல் புள்ளிகள் மத்தியில் அந்த விஐபிக்கு பெரும் மதிப்பு உண்டு. அந்த வகையில் ஒரு உ.பிபுள்ளி கொடுத்த பணத்தைத் தான் அந்த விஐபி ஜனனியிடம் தந்துள்ளார். அதில் தான் கள்ள நோட்டுக்கள்இருந்துள்ளன.

அந்த உபி புள்ளிக்கு எப்படி கள்ள நோட்டுக்கள் போயின என்பது மர்மாகவே உள்ளது.

ரிசர்வ் வங்கி அச்சடிக்க இருந்த சீரியல் நம்பரிலேயே முன் கூட்டியே பணம் அடித்துள்ளது கள்ள நோட்டுக்கும்பல். அந்தப் பணம் தான் ஜனனி வசம் வந்துள்ளது. ஜனனியிடம் கைப்பற்றப்பட்ட பணத்தில் இருந்தநோட்டுக்களில் இருந்த வரிசை எண்கள் விவரம்:

2AE-569001-570000

2AN-597001- 598000

1AN-965001- 966000

6AD-191001-192000

7AR- 647001- 648000

IAN-095001- 096000

OAP-514001-515000

இதில் 7AR சீரியல் எண் கொண்ட நோட்டுக்கள் 2004ல் தான் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டன. ஆனால்,இந்த சீரியல் எண் கொண்ட நோட்டுக்கள் 2003லேயே ஜனனியிடம் சிக்கியுள்ளன. ரிசர்வ் வங்கி வெளியிடும்முன்னே அதே சீரியல் எண் கொண்ட நோட்டுக்கள் அவரிடம் எப்படி வந்தன?.

IAN, OAP ஆகிய வரிசை எண்கள் கொண்ட நோட்டுக்களை ரிசர்வ் வங்கி இன்னும் வெளியிடவே இல்லை.ஆனால், இந்த வரிசை எண் கொண்ட நோட்டுக்களும் ஜனனியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பணத்தில்இருந்துள்ளன. இவை எப்படி வந்தன?

இதனால் உபி அரசியல் புள்ளி மூலமாக தமிழக விஐபிக்கு வந்த நோட்டுக்கள் கள்ள நோட்டுக்கள். அவை தான்ஜனனியிடம் வந்து சேர்ந்துள்ளன.

ரிசர்வ் வங்கி அச்சடிக்க இருந்த சீரியல் நம்பர் கள்ள நோட்டு கும்பலுக்கு எப்படித் தெரிந்தது?. அந்தக் கும்பல்அச்சடித்த பணம் உ.பி. அரசியல் புள்ளிக்கு எப்படி வந்தது?. உ.பி. அரசியல் புள்ளி ஏன் தமிழக விஐபியிடம்அந்தப் பணத்தைத் தந்தார்? என்று பல கேள்விகள் எழுந்துள்ளன.

மேலும் உபி முக்கிய புள்ளி கொடுத்த பணத்தில் அந்த தமிழக விஐபி ஒரு சிறிய பகுதியை (ரூ. 5 கோடியை)ஜனனியிடம் தந்துவிட்டு பெரும்பங்கை அப்போதைய ஆளும் தரப்பிடம் தந்துவிட்டார் என்று நக்கீரன் செய்திவெளியிட்டுள்ளது. ஆனால், இதை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வன்மையாக மறுத்து நேற்றுஅறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து நாசிக்கில் உள்ள ரிசர்வ் வங்கியின் ரூபாய் நோட்டு அச்சடிக்கும்மையத்தில் இருந்து விசாரணையை ஆரம்பிக்க வேண்டியுள்ளது. இதனால் சிபிசிஐடி எஸ்பி நஜ்முதீன், டிஎஸ்பிசுந்தரம் ஆகியோர் நாசிக் செல்லக் கூடும் என்று தெரிகிறது.

இதில் பல மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் புள்ளிகள், கள்ள நோட்டுக் கும்பல்கள், விஐபிக்களுக்கு தொடர்புஇருப்பதால், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றுவதே நல்லது என்றும் கருதப்படுகிறது.

இந் நிலையில் கள்ள நோட்டு வழக்கில் ஜனனி தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு நாளை விசாரணைக்குவருகிறது. இதன் மீதான தீர்ப்பைப் பொறுத்து ஜனனி கைது செய்யப்படலாம். இதனால் ஜனனியும் அவருக்குவேண்டிய அந்த விஐபியும் தொடர்ந்து உளவுப் பிரிவு போலீஸ் கண்காணிப்பிலேயே வைக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+