இன்டர்நெட்-பெண்களை விஞ்சும் இந்திய ஆண்கள்
டெல்லி :
இந்தியாவில் பெண்களை விட ஆண்களே அதிக அளவில் இணைய தளங்களைப்பார்த்து வருகின்றனர் என்று ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.
இந்தியா இன்டர்நெட் மற்றும் மொபைல் கழகமும், கிராஸ்டேப் மார்க்கெட்டிங்சர்வீஸஸ் என்ற நிறுவனமும் இணைந்து நடத்திய ஆய்வின் முடிவுகள்:இந்தியர்களில் 38.5 மில்லியன் பேர் இணைய தளங்களில் உலவுகின்றனர். இதில்ஆண்கள் 68 சதவீத்தனர். கடந்த ஆண்டு இது 72 சதவீதமாக இருந்தது.
பிரவுசிங் செய்யும் பெண்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.2004-05ல் இணைய தளங்களைப் பார்க்கும் பெண்களின் எண்ணிக்கை 28 சதவீதமாகஇருந்தது. இது இப்போது 2005-06ல் 32 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதாவது 12.32மில்லியன் பெண்கள் இணையதளங்களைப் பார்க்கிறார்கள்.
ஆண்களின் எண்ணிக்கை குறைந்தபோதிலும் கூட பெண்களை விட அதிக அளவில்இணையதளங்களைப் பார்ப்பதில் ஆண்களே முன்னணியில் உள்ளனர்.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் இணையதளங்களில் உலவும் ஆண், பெண்விகிதாச்சாரம் 60:40 என்ற அளவில் இருக்கும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில் 54 சதவீதம் பேர் அலுவலகத்திலிருந்தும், 31 சதவீதம் பேர் இன்டர்நெட்மையங்களிலிருந்தும் பிரவுசிங் செய்கின்றனர். 4 சதவீதம் பேர் மொபைல் போன்கள்மூலம் பிரவுசிங் செய்கிறார்கள். 78 சதவீதம் பேர் கடந்த 3 ஆண்டுகளாகத்தான்பிரவுசிங்கில் ஈடுபடுவதாக தெரிவித்துளளனர்.
பெண்களில் 57 சதவீதம் பேர் வீடுகளிலிருந்தபடியே இணையத் தளங்களைபார்க்கிறார்கள். இணையதளங்களை அலசும் பெண்களில் 46 சதவீதம் பேர்திருமணமாகதவர்கள்.
24 சதவீத பெண்கள் வாரத்திற்கு 21 மணி நேரங்களுக்கும் மேலாக பிரவுசிங்செய்கின்றனர்.
ஆன்லைன் மூலம் செய்திகளை அறிந்து கொள்வதை அன்றாட வாடிக்கையாக 54சதவீதம் பேர் வைத்துள்ளனர். 38 சதவீதம் பேர் தொழில்முறைத் தேவைகளுக்காகஇன்டர்நெட்டை பயன்படுத்துகிறார்கள்.
15 சதவீதம் பேர் திருமண தேவைகளுக்காக இன்டர்நெட்டைப் பயன்படுத்துகிறார்கள்.
பெரும் எண்ணிக்கையிலானவர்கள் ஜோதிடக் கணிப்புகளைப் பார்க்க இன்டர்நெட்பக்கம வருகிறார்கள். இதே காரணத்திற்காக பிரவுசிங் செய்யும் ஆண்களின்எண்ணிக்கை 22 சதவீதமாக உள்ளது.
வேலை வாய்ப்புக்காக இன்டர்நெட்டை நாடும் பெண்களின் எண்ணிக்கை 56சதவீதமாகும். ஆண்களின் எண்ணிக்கை 50 சதவீதமாகும்.












Click it and Unblock the Notifications