3வது அணியா? நான் பேசவே இல்லையே-ஜெ
சென்னை:
கருணாநிதி தலைமையிலான திமுக அரசு 5 ஆண்டுகளை பூர்த்தி செய்யாது என அதிமுக பொதுச் செயலாளர்ஜெயலலிதா கூறியுள்ளார்.
வேளச்சேரியில் சைதை துரைசாமி கட்டியுள்ள புரட்சித் தலைவி அம்மா இலவச திருமண மண்டபத்தை திறந்துவைத்து ஜெயலலிதா பேசியதாவது:இந்த திமுக அரசு முழு ஐந்தாண்டு காலமும் ஆட்சியில் இருக்கும் என்று நம்ப வருவாய் அதிகாரிகள், போலீஸ்அதிகாரிகள்.. ஏன் திமுக எம்எல்ஏக்கள் கூட தயாராக இல்லை. அதையே தான் அதிமுகவும் நினைக்கிறது. இந்தஆட்சி 5 வருடத்தை பூர்த்தி செய்யாது.
இதனால் தேர்தல் தோல்வியால் அதிமுக தொண்டர்கள் மன தைரியம் இழக்கக் கூடாது. நமக்கு ஒளிமயமானஎதிர்காலம் உள்ளது. இப்போது முன்னாள் அமைச்சர்களாக உள்ளவர்கள் விரைவில் அமைச்சர்களாவார்கள்.
3வது அணி பற்றி நான் பேசவே இல்லை. நிருபர்கள் கேட்டதற்கு 3வது அணி அமைத்தால் வரவேற்பேன் என்றுசொன்னேன். கருணாநிதியின் சந்தர்ப்பவாத அரசியலை நாடே அறியும். எந்தக் கூட்டணி மத்தியில் ஆட்சிஅமைத்தாலும் அதில் இடம் பெற்று அதிகாரத்தை கைப்பற்றுவது கருணாநிதியின் வாடிக்கை.
பாஜக கூட்டணி ஆட்சியில் முரசொலி மாறனை அமைச்சராக்கினார். இப்போது காங்கிரஸ் கூட்டணி அரசில்தயாநிதியை அமைச்சராக்கினார். அடுத்து 3வது அணியை உருவாக்க இடதுசாரிகளுடன் சேர்ந்து கருணாநிதிதான் முயன்று வருகிறார்.
சமீபத்தில் டெல்லிக்குச் சென்ற கருணாநிதி சிபிஎம் தலைவர் ஹர்கிசன் சிங் சுர்ஜித்தை சந்தித்து அவர்களதுமூன்றாவது அணியில் சேரத் தயார் என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறார்.
இந்த திருமண மண்டபம் விதியை மீறி கட்டப்பட்டுள்ளதாகக் கூறி நோட்டீஸ் அனிப்பியுள்ளனர். இதில் தவறுஏதாவது இருந்திருந்தால் திறந்த வைக்க நான் சம்மதித்து இருக்க மாட்டேன். சட்டப்படி நோட்டீஸை சைதைதுரைசாமி எதிர்கொள்வார். அதிமுக வழக்கறிஞர்கள் குழு அவருக்கு உதவும்.
மக்கள் மீது கருணாநிதிக்கு எந்த அக்கறையும் கிடையாது. நான் என்ன செய்கிறேன். நான் என்ன அறிக்கைவிடுகிறேன் என்று பார்த்துக் கொண்டிருக்கிறார், நான் சொல்லும் அற்ப விஷயத்துக்கு எல்லாம் பதிலுக்குஅறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார் என்றார் ஜெயலலிதா.
திமுக அமைச்சர்கள் விலக வேண்டும்:
முன்னதாக, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன (என்.எல்.சி.) பங்குகளை தனியாரிடம் ஒப்படைக்கும் மத்திய அமைச்சரவை முடிவு தொடர்பாக ஜெயலலிதாவெளியிட்ட அறிக்கையில்,
என்.எல்.சி. நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவை மத்திய அமைச்சரவை எடுத்தபோதுஅதை ஆதரித்து திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
ஆனால் மத்திய அமைச்சரவையின் இந்த முடிவை எதிர்ப்பதாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். கருணாநிதியின் இந்தப் பேச்சு பெரும் கேலிக்கூத்தாகும்.
முதல்வர் கருணாநிதி திமுகவின் தலைவர் என்பதை நாடறியும். அவருடைய கட்சிக்காரர்கள் மத்திய அரசிலே அமைச்சர்களாக உள்ளனர் என்பதையும்நாடறியும். மத்தியில் தீர்மானத்தை ஆதரித்ததும் திமுகதான்.
சென்னையிலே அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததும் அதே திமுகதான்.
மத்தியில் ஆட்சி செய்யும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் திமுக அங்கம் வகிக்கிறது. மத்திய அரசில் திமுக அமைச்சர்களும் அங்கம் வகிக்கிறார்கள்.
இப்படி இருக்க மத்திய அரசின் முடிவில் எங்களுக்குப் பங்கு இல்லை என்றோ, எல்.எல்.சி. நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளைத் தனியாருக்கும் விற்கும்முடிவில் உடன்பாடு இல்லை என்றோ, அதைப் பற்றித் தெரியாது என்றோ திமுக அமைச்சர்கள் கூற முடியுமா?
இதில் திமுகவுக்கு கூட்டுப் பொறுப்பு உள்ளது. மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் திமுக அமைச்சர்கள் கலந்து கொண்டார்களா, இல்லையா என்பதுஎனக்குத் தெரியாது என்று கூறுகிறார் கருணாநிதி.
திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் செவ்வாய் கிரகத்திலா வாழ்கிறார்கள்? பெரும்பாலும் சென்னையில்தானே இருக்கிறார்கள்? அவர்களைஅழைத்து கருணாநிதி கேட்டுத் தெரிந்து கொண்டிருக்க முடியாதா? தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்பதற்கு எவ்வளவு நேரம் ஆகப் போகிறது?
தெரியவில்லை என்று அவர் சொல்வதை யாராவது நம்புவார்களா? அவருக்குத் தெரியாமல் அவருடைய கட்சிக்கார அமைச்சர்கள் டெல்லியிலே ஒப்புதல்கொடுத்திருந்தால், எப்படி இப்படி ஒப்புதல் கொடுத்தீர்கள் என்று கருணாநிதி கண்டித்திருக்க வேண்டாமா?
உடனடியாக மத்திய அரசிலிருந்து தனது அமைச்சர்களை ராஜினமா செய்ய சொல்லியிருக்க வேண்டாமா? அவ்வாறு உத்தரவிட்டிருந்தால், தனக்குத்தெரியவில்லை என்று அவர் சொல்வதை நாடு நம்பும்.
என்.எல்.சி. ஊழியர்களின் போராட்டத்தில் திமுகவும் பங்கேற்கும் என்று கருணாநிதி கூறுவது மக்களை ஏமாற்றும் செயல். திமுகவும் மத்தியில் ஆளும்கட்சிதானே? அப்படி இருக்கையில் திமுக அங்கம் வகிக்கும் மத்திய அரசு எடுத்துள்ள முடிவுக்கு எதிராக, மத்திய அரசில் இருந்து கொண்டே எப்படிபோராட்டம் நடத்த முடியும்?
பாலுக்கும் காவல், பூணைக்கும் தோழன் என்ற திமுகவின் நிலைப்பாட்டை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். திமுக இப்போராட்டத்தில் கலந்துகொள்வதை மற்ற தொழிற்சங்கங்கள் ஏற்கக் கூடாது, எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.
என்.எல்.சி. நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்கக் கூடாது என்று உண்மையிலேயே கருணாநிதி நினைப்பாரேயானால், மத்தியில் உள்ளதனது அமைச்சர்களை பதவி விலகச் சொல்ல வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
தொழிற் சங்கத்தினர்-கருணாநிதி சந்திப்பு:
இந் நிலையில் மத்திய அரசு தனது முடிவை வாபஸ் பெறக்கோரி நேற்று முதல் தொழிற் சங்கத்தினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.போராட்டம் நடத்தும் என்எல்சி தொழிற் சங்கத்தினரை பேச்சு நடத்த வருமாறு முதல்வர் கருணாநிதி அழைப்பு விடுத்தார்.
இதையடுத்து கருணாநிதியை அவர்கள் சந்தித்தனர். அப்போது, உங்கள் கோரிக்கையை மத்திய அரசிடம் தெரிவிப்பேன். பங்கு விற்பனையை தடுக்க முயற்சிஎடுப்பேன் என உறுதியளித்தார்.












Click it and Unblock the Notifications