தாதா கும்பலில் மகன்-80 வயது தாய் தவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மும்பை தாதா கும்பலில் சிக்கியுள்ள தனது மகனை மீட்டுத் தரக் கோரி 80 வயதானதாய் சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளார்.

சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்தவர் வித்யா ரத்னம். 80 வயதாகும் இவர்மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்து கூடுதல் ஆணையர்ஜாங்கிட்டிடம் ஒரு புகார் மனுவைக் கொடுத்தார்.

கண்ணீர் மல்க வித்யா கொடுத்த புகார் மனுவில்,

நான் நர்சிங் கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். எனக்கு எட்வர்ட்பாஸ்கரன், ரிச்சர்ட் சந்திரன் என 2 மகன்கள் உள்ளனர். இருவரும் இரட்டையர்கள்.கல்யாணமாகி 13 வருடம் கழித்து இவர்கள் பிறந்தனர்.

எட்வர்ட் பாஸ்கரன் பி.காம் படித்துள்ளார். கடந்த 2003ம் ஆண்டு செப்டம்பர் 14ம்தேதி முதல் எட்வர்ட் காணாமல் போய் விட்டார். அவரை நான் பல இடங்களிலும்தேடி வந்தேன். ஆனால் கிடைக்கவில்லை.

இதுகுறித்து சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகாரும் கொடுத்துள்ளேன்.ஆணையர் அலுவலகத்திலும் புகார் கொடுத்துள்ளேன்.

இதற்கிடையே எனக்கு ஒரு தகவல் கிடைத்தது. எனது மகனை எனது உறவினர்கள்சிலர் மும்பை ரயில் நிலையத்தில் பார்த்துள்ளனர். அப்போது அவன் தலைமுடியைநீளமாக வைத்திருந்தான். உடல் முழுவதும் ஏராளமான நகைகள் இருந்துள்ளன.

அவனைப் பார்த்த உறவினர்கள் தங்களுடன் வருமாறு கூறியபோது, அதற்குள் அங்குவந்த ஒரு தாதா கும்பல், அவனை அங்கிருந்து அழைத்துச் சென்று விட்டதாம்.

அவன் மும்பை தாதா கும்பலிடம் சிக்கியிருக்கலாம் என அஞ்சுகிறேன். எனவேஅவனை பத்திரமாக மீட்டு என்னிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்என வித்யா கூறியிருந்தார்.

மனுவைப் பெற்ற கூடுதல் ஆணையர் ஜாங்கிட் நிச்சயம் உரிய நடவடிக்கைஎடுப்பதாக உறுதியளித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+