வருகிறது அடுக்கு மாடி கல்லறை!
சென்னை:
சென்னை கீழ்ப்பாககம் கிறிஸ்தவக் கல்லறைத் தோட்டத்தில் அடுக்கு மாடிக் கல்லறைமுறை அமல்படுத்தப்படவுள்ளது.
சென்னை கல்லறைத் தோட்ட வாரியத்தின் கீழ் சென்னை மாநகரில் 3 கல்லறைகள்உள்ளன. கீழ்ப்பாக்கம், காசிமேடு, பட்டினப்பாக்கம் ஆகிய இடங்களில் இவைஉள்ளன.இதில் கீழப்பாக்கம் கல்லறைத் தோட்டம் நிரம்பி விட்டதால் அந்தக் கல்லறைத்தோட்டம் மூடப்பட்டு விட்டது. மற்ற இரு கல்லறைத் தோட்டங்களிலும் இடப்பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.
முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே இங்கு உடல் அடக்கம் செய்யப்பட்டுவருகிறது.
பட்டினப்பாக்கத்தில் இன்னும் 200 உடல்களை மட்டுமே அடக்கம் செய்ய முடியும்.இதைத் தொடர்ந்து மாற்று இடம் தேடும் பணி நடந்து வருகிறது. மாற்று இடம்கிடைக்கும் வரை உடல்களை அடக்கம் செய்ய மாற்று ஏற்பாடுகளை கல்லறைத்தோடட வாரியம் யோசித்து வருகிறது.
அதன்படி கேரளாவில் உள்ளதைப்போல அடுக்கு மாடிக் கல்லறைகளை அமைக்கமுடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முறை கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில்இன்னும் 4 மாதங்களில் அமல்படுத்தப்படவுள்ளது.
இந்த முறை தமிழகத்திலேயே இங்குதான் முதல் முறையாக நடைமுறைக்குவரவுள்ளது.
தற்போது ஒரு உடலை மண்ணில் புதைத்தால் அடுத்த 14 ஆண்டுகளுக்குப் பிறகுதான்அந்த இடத்தில் இன்னொரு உடலைப் புதைக்க முடியும்.
தற்போதைய அடுக்குமாடி கல்லறை முறையில் இதற்கு அவசியம் இல்லை. ஒருஉடலை புதைத்தால் 2 ஆண்டுகளிலேயே அடுத்த உடலை அந்த இடத்தில் புதைக்கமுடியும்.
இதற்கு வால்ட் முறை என்று பெயர். அதன்படி 30 அடி நீளம், 8 அடி அகலம், 10 அடிஉயரத்தில் சிமென்ட் அறை அமைக்கப்படுகிறது. இந்த அறை குறுக்குவாக்கில் 15பிரிவாக பிரிக்கப்படும்.
ஒவ்வொரு பிரிவும் மேலும், கீழுமாக 5 அடுக்குகளாக பிரிக்கப்படும். இப்படியாகமொத்தம் 75 வால்ட்டுகள் அதாவது கல்லறைகள் அமைக்கப்படும்.
ஒவ்வொரு வால்ட்டின் உட்புறமும் காற்றுப் புகாத அளவக்கு கதவுகளும்அமைக்கப்படும்.
இந்த வால்ட்டுகளுக்குப் பின்புறம் 8 அடி இடைவெளி விட்டு இதேபோன்றுஇனனொரு வால்ட் கல்லறை அமைக்கப்படும். இதிலும் 75 கல்லறைகள் இருக்கும்.இரண்டு வால்ட் கல்லறைகளுக்கும் இடையே முழுவதும் சிமென்ட்டால் ஆன கிணறுஅமைக்கப்படும்.
மொத்தம் 150 கல்லறைகளும் ஒரு கிணறும் சேர்ந்து பிளாக் எனப்படும்.
இந்த 150 கல்லறைகளில் ஒரு வால்ட்டுக்கு ஒரு உடல் என மொத்தம் 150 உடல்களைவைக்க முடியும். 2 ஆண்டுகள் கழித்து அந்த வால்ட் தேவைப்படுமானால் அதன்கதவுகள் திறக்கப்படும்.
2 ஆண்டுகள் ஆகியும், அழுகாமல் உள்ள உடலின் மீதப் பகுதிகள் அகற்றப்பட்டுஅருகே உள்ள கிணற்றில் விடப்படும். பின்னர் அந்த வால்ட் சுத்தம் செய்யப்பட்டுஅங்கு வேரு ஒரு உடலை வைக்கலாம்.
இதுபோல வால்ட்டுகள் அடங்கிய மொத்தம் 3 பிளாக்குகளை கீழ்ப்பாக்கம் கல்லறைத்தோட்டத்தில் அமைக்கவுள்ளனர். இதன் மூலம் சிறிய இடத்தில் மொத்தம் 450கல்லறைகளை அமைக்க முடியும். இப்பணி ஜூலையில் தொடங்கி நான்குமாதங்களில் முடிக்கப்படும்.
இதில் விசேஷம் என்னவென்றால் ஒரு வால்ட்டை ஒரே குடும்பத்தினரே தொடர்ந்துபயன்படுத்த முடியும். இதற்கான கட்டணம் இன்னும் நிர்ணயம் செய்யப்படவில்லை.கட்டுமானச் செலவைப் பொருத்து கட்டணம் நிர்ணயிக்கப்படவுள்ளது.
மேலும் புதைக்கும் வழக்கத்தைக் கைவிட்டு விட்டு உடலை எரிக்கும் பழக்கம்படிப்படியாக நடைறைக்கு வந்து கொண்டுள்ளது. இதுவரை 15 கிறிஸ்தவர்களின்உடல்கள் சென்னையில் எரிக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் கிடைத்த சாம்பலை சிறியகல்லறைக்குள் வைத்துள்ளனர்.
இந்த முறை அதிகரித்தால், சிறிய புறாக்ககூண்டு அளவுக்கு கல்லறைகள் மாறும்சூழ்நிலை ஏற்படும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications