கே.பி.கே.குமரனின் சொத்து ரூ. 123 கோடி!
சென்னை:
ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.பி.கே.குமரன் தனதுசொத்து மதிப்பு ரூ. 123 என தெரிவித்துள்ளார்.
திமுக சார்பில் ராஜ்யசபா தேர்தலில் தினகரன் முன்னாள் நிர்வாக இயக்குனர்கே.பி.கே.குமரன் போட்டியிடுகிறார். நேற்று தனது வேட்பு மனுவை அவர் தாக்கல்செய்தார். அப்போது சொத்துக்களின் விவரங்களையும் அவர் தனது மனுவுடன்இணைத்திருந்தார்.அதில் தனது அசையாச் சொத்துக்களின் மதிப்பு ரூ. 123 கோடி என குமரன்தெரிவித்துள்ளார்.
வங்கிகள் மற்றும் பல்வேறு நிதி நிறுவனங்களில் தனக்கும், தனது மனைவிக்கும் ரூ.12.2 கோடி ரொக்கம் இருப்பாக குமரன் தெரிவித்துள்ளார்.
இதுதவிர ரூ. 41.19 கோடி மதிப்புள்ள கடன் பத்திரம், பங்கு முதலீடுஆகியவற்றையும் கணக்கு காட்டியுள்ளார்.
ரூ. 89.12 லட்சம் நகை, ரூ. 10.84 லட்சம் மோட்டார் வாகனங்கள்.
மகள்களின் பெயரில் ரூ. 12.74 கோடி ரொக்கம் முதலீடு செய்யப்பட்டுள்ளது.அவர்களது நகைகளின் மதிப்பு ரூ. 59.95 லட்சமாகும். இதுதவிர பல்வேறுமாவட்டங்களில் உள்ள பிற நிலங்களின் மதிப்பு ரூ. 12 கோடி எனவும், 105 ஏக்கர்விவசாய நிலங்கள் உள்ளதாகவும் குமரன் கணக்கு காட்டியுள்ளார்.
தமிழகத்தில் இதுவரை நடந்த தேர்தல்களில் போட்டியிட்ட வேட்பாளர்களிலேயேகுமரன்தான் பெரும் கோடீஸ்வரர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் தினகரன் நிறுவனர் கே.பி.கந்தசாமியின் மகன் ஆவார். தினத் தந்தி அதிபர்சிவந்தி ஆதித்தனின் மருமகன் ஆவார்.
கடந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட ஜெயலலிதா தனது சொத்து மதிப்பாக ரூ.25 கோடியை கணக்கு காட்டியிருந்தார். முதல்வர் கருணாநிதி தனது சொத்து மதிப்புரூ. 24 கோடி என கணக்கு காட்டியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications