சென்னை டூ டெல்லிக்கு ஏழைகள் ரதம்!
சென்னை:
ஏழைகள் ரதம் என்ற சாதாரண மக்கள் பயணம் செய்யும் வகையில் குளுகுளுவசதியுடன் கூடிய சிறப்பு ரயில்கள் சென்னைக்கும், டெல்லிக்கும் இடையேஇயக்கப்படவுள்ளன.
மத்திய ரயில்வே பட்ஜெட்டில் ஏழைகள் ரதம் என்ற பெயரிலான குறைந்த கட்டணஏசி ரயில்கள் அறிவிக்கப்பட்டன.இதில் ஒரு ரயில் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. டெல்லி-சென்னை இடையிலானஇந்த ரயில் அக்டோபர் 2ம் தேதி முதல் இயங்கும்.
அதே போல டெல்லி-மும்பை, டெல்லி-பாட்னா, அமிர்தசரஸ்-செர்ஸா ஆகியஊர்களுக்கு இடையே இந்த ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
முற்றிலும் குளுகுளு வசதியுடன் கூடிய இந்த ரயில்களில் கட்டணம் மிக மிககுறைவாக இருக்கும். ஏழைகளும், நடுத்தர வகுப்பு மக்களும் பயணம் செய்வதற்குவசதியாக இந்த ரயில்களை அறிமுகப்படுத்துகிறது ரயில்வே.
வழக்கமான ரயில்களின் 3 டயர் ஏசி கட்டணத்தை விட இந்த ரயிலில் கட்டணம் 25சதவீதம் குறைவாகவே இருக்கும்.
உதாரணமாக இந்த ரயிலில் 1,400 கி.மீ. தூரத்துக்கு இருக்கையில் அமர்ந்து செல்லகட்டணம் ரூ. 500 தான். படுக்கை வசதி வேண்டுமானால் ரூ. 650 கட்டணம் செலுத்தவேண்டும்.
7 ரயில்கள் வேகம் அதிகரிப்பு:
இதுதவிர தமிழகத்தில் ஓடும் 7 ரயில்களின் வேகம் நாளை முதல்அதிகரிக்கப்படுகிறது.
சென்னை -தூத்துக்குடி இடையிலான முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் அதிவிரைவுரயிலாக மாற்றப்படுகிறது. இதன்படி சென்னையிலிருந்து தற்போது கிளம்பும் மாலை6.30க்குப் பதிலாக இரவு 7.30க்கு முத்துநகர் எக்ஸ்பிரஸ் கிளம்பும். மறுநாள் காலை7.45 மணிக்கு தூத்துக்குடியை சென்றடையும்.
இதேபோல, சென்னை -நாகர்கோவில், சென்னை- பெங்களூர், சென்னை - மங்களூர்,சென்னை-வாரணாசி, சென்னை-டேராடூன், சென்னை-ஹைதராபாத் ஆகியரயில்களும் அதி வேக ரயில்களாக மாற்றப்படுகின்றன.
மதுரை உள்பட 40 ரயில் நிலையங்களில் பட்ஜெட் ஹோட்டல் கட்டும் திட்டத்தையும்ரயில்வே துறை இறுதி செய்து வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications