சபரிமலை: சதி நடப்பதாக இல.கணேசன் சந்தேகம்
மதுரை:
சபரிமலை விவகாரத்தில் பெரும் சதி நடப்பதாக பாஜக அகில இந்திய துணைத்தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
மதுரை வந்த இல.கணேசன் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,பிரபல இளம்பெண் ஒருவர் ஐயப்பன் சன்னிதானத்திற்குள் நுழைந்ததாகவும், அவரதுவயது குறித்தும் உண்ணிகிருஷ்ண பணிக்கர் கூறியிருக்கிறார். இது சந்தேகத்திற்குஉரியதாகும்.
அவர் சொன்னதைத் தொடர்ந்து ஒரு நடிகையும் இதுகுறித்து அறிவித்துள்ளார்.ஐயப்பனை சன்னிதானத்திற்குள் சென்று யாரும் தொட முடியாது.அதற்கான வாய்ப்பேஇல்லை.
யாரும் இல்லாத நிலையில் அங்கு சென்று பூஜை செய்திருந்தால், அதுபற்றிவிசாரிக்கலாம். ஆனால் கூட்டம் இருக்கும் போதே அவர் விக்கிரகத்தைத்தொட்டிருப்பதாக கூறியிருக்கிறார். அப்படி நடந்திருந்தால் அப்போதே சலசலப்புஏற்பட்டிருக்கும்.
உண்ணிகிருஷ்ண பணிக்கரை பிரஸ்னம் பார்க்க அழைத்தது யார்? இதில் அரசியல்பின்னணி எதுவும் உள்ளதா? இதில் சதித் திட்டம் நடந்திருக்க வேண்டும்.
அன்னிய நாட்டு சதிக்கு வீழ்ந்து பெயருக்காக அல்லது பணத்துக்காக இதுபோன்றசெயல்களில் ஈடுபட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. திட்டமிட்டே இந்து மதநம்பிக்கையைக் குலைக்கும் முயற்சி நடக்கிறது.
ஆசியாவில் மதமாற்றத்தை தீவிரப்படுத்த வேண்டும் என்று போப் ஆண்டவர்கூறியிருக்கிறார். இது இந்தியாவைக் குறி வைத்துக் கூறியதைப் போல இருக்கிறது.
இந்து மதத்தின் நம்பிக்கையைத் தகர்க்கும் வகையில் சங்கராச்சாரியார் விவகாரம்,அமர்நாத் பனிலிங்க விவகாரம், சபரிமலை விவகாரங்கள் உள்ளன.
திமுக ஆட்சி விரைவில் கவிழும் என்று ஜெயலலிதா கூறுகிறார். ஆனால் அதற்குவாய்ப்பே இல்லை. காரணம் அங்குள்ள கூட்டணிக் கட்சிகளின் நிலை அப்படிஉள்ளது. மத்திய அமைச்சரவையில் பாமக இருக்கிறது.
அந்தப் பதவி அவர்களுக்கு ஒரு காமதேனு மாதிரி. எனவே அவர்கள் தொடர்ந்துதிமுகவை ஆதரிக்கத்தான் வேண்டும். அதேபோல மத்தியில் காங்கிரஸ் கட்சிக்குக்கொடுத்து வரும் ஆதரவை திமுக வாபஸ் பெறாது.
அதற்குக் காரணம் தயாநிதி மாறன். அவர் அமைச்சர் பதவியில் தொடர வேண்டியஅவசியம் திமுகவுக்கு உள்ளது. மேலும், காங்கிரஸ் கட்சி திமுகவை கைவிடாது.காரணம், திமுகவிடம் அதிக எம்.பிக்கள் உள்ளனர்.
எனவே இவர்கள் யாரும் ஒருவரை ஒருவர் காலை வாரி விட மாட்டார்கள். எனவேஆட்சி கவிழும் வாய்ப்பே இல்லை என்றார் இல.கணேசன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications