இந்து கடவுள் சிலைகளை படைக்கும் இஸ்லாமிய குடும்பம்
வேலூர்:
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லீம் குடும்பத்தினர், வீட்டில் பயனற்றுக்கிடக்கும் பித்தளை, அலுமினியப் பாத்திரங்களை உருக்கி சில நிமிடங்களில் நாம்கேட்கும் இந்துக் கடவுள்களின் உருவங்களை உருவாக்கி அசத்துகின்றனர்.
ஆந்திர மாநிலம் மெகபூப் நகரைச் சேர்ந்த இந்த முஸ்லீம் குடும்பம், இந்தியாமுழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று இந்த பணியை செய்து வருகிறார்கள்.மெகபூப் நகரைச் சேர்ந்தவர்கள் என்றாலும் கூட இவர்கள் நாடோடிகளாகத்தான்வாழ்க்கை நடத்துகின்றனர். ஒரு மாநிலத்திற்குச் சென்றால் அங்கு கிட்டத்தட்ட ஒருவருடம் வரை தங்கியிருக்கிறார்கள்.
பல்வேறு ஊர்களுக்கும் செல்லும் இவர்கள் சாலையோரம் குடில் அமைத்து அங்கேதங்கிக் கொள்கின்றனர். பின்னர் தெருத் தெருவாக சென்று தங்களது வேலையைத்தொடங்குகிறார்கள்.
முதலில் தெரு முனையில் ஒரு குழியைத்தோண்டி அங்கு கரி அடுப்பு ஒன்றைஏற்படுத்துகின்றனர்.
சிலை வடிப்பதற்கான ஏற்பாடுகளை செய்து முடித்தவுடன், அந்தக் குழுவில் உள்ளஒருவர் வீடு வீடாக சென்று வீட்டில் பயனற்று இருக்கும் பித்தளை, அலுமினியப்பொருட்கள் இருந்தால் தாருங்கள், நீங்கள் விரும்பும் கடவுள்களின் உருவத்தைவடித்து தருகிறோம் என்று கூறுகிறார்.
இதைக் கேட்டு ஆச்சரியமடையும் பொதுமக்களில் சிலர் தங்கள் வீட்டில் உள்ளஅலுமினிய, பித்தளைப் பொருட்களைக் கொடுக்கிறார்கள்.
அதைப் பெற்றுக் கொண்டுவாடிக்கையாளரின் விருப்பத்திற்கு ஏற்ப முருகன்,விநாயகர், சிவன், லட்சுமி, வெங்கடாஜலபதி உள்ளிட்ட கடவுள் உருவங்களை,தாங்கள் ஏற்கனவே வைத்துள்ள அச்சுக்களில், உருக்கப்பட்ட அலுமினியம்,பித்தளையை ஊற்றி சிலைகளை உருவாக்குகிறார்கள்.
சில நிமிடங்களிலேயே கண்ணைப் பறிக்கும் வகையில் கடவுள் சிலைகள்மின்னுவதால் இவர்களுக்கு அப்பகுதி மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கிறது.
மேலும் சில நிமிடங்களில் தாங்கள் விரும்பிய கடவுள்களின் சிலைகள் கிடைத்துவிடுவதால் இவர்களிடம் சிலை வடிக்க பாத்திரம் கொடுப்போரின் எண்ணிக்கையும்அதிகமாகவே உள்ளது.
பொருட்களின் மதிப்புக்கேற்ப ரூ. 40 முதல் ரூ. 100 வரை சிலை வடிப்பதற்காககட்டணம் வசூலிக்கிறார்கள் இவர்கள். பரம்பரை பரம்பரையாக தங்களதுகுடும்பத்தினர் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளதாக குழுவில் இடம் பெற்றுள்ள சலீம்என்பவர் கூறினார். தற்போது இந்தக் குடும்பம் வேலூரில் முகாம் போட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications