திமுகவின் வன்முறை: அதிமுகவினருக்கு இலவச சட்ட ஆலோசனை- ஜெ.
சென்னை:
திமுகவினரின் வன்முறையால் பாதிக்கப்படும் அதிமுகவினருக்கும்,பொதுமக்களுக்கும் உதவுவதற்காக இலவச சட்ட ஆலோசனைக் குழுஅமைக்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலிலதா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,திமுக ஆட்சிக்கு வந்தது முதல் அக்கட்சியினரின் வன்முறைச் செயல்கள்அதிகரித்துள்ளன. அவர்களது அராஜக செயல்களுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது.
தேர்தலில் முழு வெற்றி பெறாத ஆத்திரத்தில் அதிமுகவினரையும், பொதுமக்களையும்தாக்குவது, பொருட்களை சூறையாவடு, பொய் வழக்கு போடுவது, கொலைசெய்வது,கடுமையாக தாக்கி காயப்படுத்துவது என வன்முறைச் செயல்களில் திமுகவினர்ஈடுபட்டு வருகின்றனர்.
இப்படி திமுகவினரின் வன் செயல்களால் பாதிக்கப்பட்டுள்ள அதிமுகவினர் மற்றும்பொதுமக்களுக்கு உதவுவதற்காக இலவச சட்ட ஆலோசனை வழங்க ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம், சென்னை மற்றும் மாவட்டங்களில் உள்ள நீதிமன்றங்களில்உள்ள அதிமுக வழக்கறிஞர்களின் பெயர்கள், முகவரிகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த வாய்ப்பை அதிமுவினரும், பொதுமக்களும் பயன்படுத்திக் கொள்ளலாம் எனதனது அறிக்கையில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications