திமுகவில் சேர முயற்சியா? எல்.ஜி விளக்கம்
சென்னை:
திமுகவில் சேர்க்க என்னை இழுப்பதாகவும், நான் முயற்சிகள் செய்து வருவதாகவும்கூறப்படும் வதந்திகளை மதிமுக தொண்டர்கள் நம்ப மாட்டார்கள்.கடைசி வரையில்வைகோவுடன் இணைந்தே இருப்பேன் என்று மதிமுக அவைத் தலைவர்எல்.கணேசன் கூறியுள்ளார்.
சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன், மதிமுக கூட்டு வைக்க எல்.ஜி.தான் முக்கியக்காரணம். அவர் இழுத்த இழுப்பில் வைகோ அசைந்து கொடுக்கப் போக ,அதிமுக-மதிமுக கூட்டு உருவானது.ஆனால் கூட்டணி உருவான பின்னர் எல்.ஜி. சத்தம் இல்லாமல் அமைதியாகி விட்டார்.தேர்தல் பிரசாரத்திலும் கூட அவர ஈடுபடவில்லை. இந்த நிலையில் எல்.ஜி.யைதிமுகவுக்கு இழுக்க முயற்சி நடப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
எல்.ஜியும் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாக கூறப்பட்டது. இதை இப்போதுஎல்.ஜி. மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒருவாரப் பத்திரிக்கையில், மதிமுக குறித்தும், பொதுச்செயலாளர் வைகோ குறித்தும்,என்னைப் பற்றியும் உண்மைக்கு மாறான கருத்துக்களை, அவதூறுகளை வெளியிட்டுஉள்ளது கடுமையான கண்டனத்துக்குரியது.
மதிமுக நெருப்பு. அவதூறுகள் எனும் ஈயும், வதந்தி எனும் எறும்பும் அதை நெருங்கமுடியாது. எனக்கும் வைகோவுக்கும் சிண்டு முடிந்து விட யார் முயன்றாலும் அதுஆப்பை அசைத்து விட்ட குரங்கின் கதைதான் ஆகும்.
மொழிப் போர்க்களத்தில் பூத்தது எங்களது நட்பு. 42, 43 ஆண்டுகளாக எந்தவிதவிரிசலும் எங்களது நட்பில் ஏற்பட்டதில்லை. மதிமுகவினர் எக்கு உள்ளம்படைத்தவர்கள். எத்தனையோ சோதனைகளைக் கடந்தவர்கள்.
இப்படிப்பட்ட வதந்திகளையும், அவதூறுகளையும் தூசியென தட்டி விட்டுச் செல்லக்கூடியவர்கள். தேர்தலுக்குப் பின்னரும் அதிமுகவுடன் அமைத்த கூட்டணியை மேலும்வலுப்படுத்தும் வகையில் தூய உணர்வோடு அரசியல் களத்தில் இணைந்து நானும்,வைகோவும் செயலாற்றிக் கொண்டிருக்கிறோம்.
எங்களுக்குள் பிரிவு கிடையாது என்று கூறியுள்ளார் எல்.ஜி.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications