கபிணி அணை திறப்பு; ஓகனேக்கலில் வெள்ளம்
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி:
கர்நாடகத்தின் கபிணி அணையிலிருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்துவிடப்பட்டிருப்பதால் ஓகனேக்கல் அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் தென் மேற்கு பருவ மழை விறுவிறுப்படைந்துள்ளது. இதனால்அங்கு கன மழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழை காரணமாக முக்கியஅணையான கபிணி நிரம்பியுள்ளது.இதையடுத்து அணையின் பாதுகாப்பை கருதி அணையிலிருந்து விநாடிக்கு 30,000கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.
இந்த தண்ணீர் தற்போது மேட்டூர் அணையை அடைந்துள்ளது.
கபிணியிலிருந்து தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதால்தமிழக, கர்நாடக எல்லையில் உள்ள ஓகனேக்கல் அருவிகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக அருவிகளில் குளிக்க, மீன் பிடிக்க, படகு சவாரி செய்ய மாவட்டநிர்வாகம் தடை விதித்துள்ளது.












Click it and Unblock the Notifications