அப்துல் கலாம் அண்ணன் மகன் மரணம்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் அண்ணன் மகன் பெங்களூரில் காலமானார்.
அப்துல் கலாமின் அண்ணன் முகம்மது முத்துமீரான் லெப்பை மரைக்காயர். இவரதுமகன் சாகுல் ஹமீது. 63 வயதாகும் இவர் ரயில்வே அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.பெங்களூரில் உள்ள தனது மகன் அகமது ஜலால் வீட்டில் மனைவியுடன் வசித்துவந்தார். நேற்று மாலை வாக்கிங் சென்றபோது சாகுல் ஹமீதுவுக்கு மாரடைப்புஏற்பட்டது. மயங்கி விழுந்த அவர் மரணமடைந்தார்.
இதையடுத்து அவரது உடல் ராமேஸ்வரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்குஇன்று இறுதிச் சடங்குகள் நடைபெறுகிறது.
ஏவுகணை தளத்தில் கலாம்:
இதற்கிடையே ஒரிஸ்ஸா மாநிலத்தில் சுற்றுப் பயணம் செய்த ஜனாதிபதி அப்துல்கலாம் நேற்று வங்கக் கடலில் உள்ள வீலர் தீவில் அமைந்துள்ள ஏவுகணைத்தளத்துக்குச் சென்றார்.
அக்னி உள்ளிட்ட பல ஏவுகணைகளை முன்பு இங்கிருந்து தான் கலாம் ஏவி சோதனைநடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏவுகணை தளத்தில் டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானிகளுடன் கலாம் ஆலோசனை நடத்தினார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications