போர்ச்சுகலை வீழ்த்தியது பிரான்ஸ்: இறுதிபோட்டியில் இத்தாலியுடன் மோதல்!
மியூனிக்:
உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியின் 2வது அரை இறுதி ஆட்டத்தில்போர்ச்சுகல் அணியை பிரான்ஸ் 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.
பரபரப்பான முதல் அரை இறுதிப் போட்டியில் வலுவான ஜெர்மனியை 2-0 என்றகோல் கணக்கில் இத்தாலி அணி அபாரமாக தோற்கடித்து இறுதிப் போட்டிக்குஏற்கனவே தகுதி பெற்றுள்ளது.
![]() |
ஆட்டம் தொடங்கியது முதலே இரு அணிகளும் கடும் பலப்பரிட்சையைமேற்கொண்டன. பிரான்ஸ் அணியின் கோல் அடிப்பு முயற்சிகளை போர்ச்சுகல்வீரர்கள் திறமையாக சமாளித்தனர்.
இந் நிலையில் ஆட்டத்தின் 33வது நிமிடத்தில் பிரான்ஸ் அணிக்கு பெனால்டிவாய்ப்பு கிடைத்தது. பிரான்ஸ் வீரர் தியரி ஹென்றியை, போர்ச்சுகல் வீரர் ரிக்கார்டோகார்வாலோ கீழே தள்ளியதால் இந்த பெனால்டி பிரான்ஸுக்குக் கிடைத்தது.
![]() |
இதனால் 1-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள்நுழைந்தது.
ஜிடேன் போட்ட கோலால் பிரான்ஸ் அணிக்கு வெற்றி கிடைத்தது மட்டுமின்றி,ஜிடேன் குறித்து நிலவிய பல்வேறு விமர்சனங்களுக்கு முற்றுப் புள்ளி வைப்பதாகவும்அமைந்தது.
![]() |
இறுதிப் போட்டியில் வலுவான இத்தாலியை பிரான்ஸ் சந்திக்கிறது.
இந்தப் போட்டி வரும் 9ம் தேதி பெர்லின் ஒலிம்பியா ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.இத்தாலியும், பிரான்ஸும் தொடர்பான செய்திகள்பு பல்வேறு போட்டிகளின் இறுதி ஆட்டத்தில்சந்தித்துள்ளன.
2000மாவது ஆண்டு நடந்த ஈரோ கோப்பைப் போட்டியில் 2-1 என்ற கணக்கில்இத்தாலியை பிரான்ஸ் வீழ்த்தி கோப்பையைத் தட்டிச் சென்றது.
![]() |
வரும் 8ம் தேதி 3வது மற்றும் 4வது இடத்தை நிர்ணயம் செய்யும் போட்டிநடைபெறுகிறது. இதில் ஜெர்மனியும், போர்ச்சுகலும் மோதுகின்றன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்
















Click it and Unblock the Notifications