இடஒதுக்கீடுக்கு எதிர்ப்பு-எஐஐஎம்எஸ் இயக்குனர்வேணுகோபால் டிஸ்மிஸ்-அன்புமணி அதிரடி
டெல்லி:
டெல்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக (எஐஐஎம்எஸ்) இயக்குனர் டாக்டர்வேணுகோபால் நடத்தை விதிகளை மீறியதற்காக பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை எதிர்த்து டெல்லி மருத்துவஅறிவியல் கழக மாணவர்கள் காலவரையற்ற போராட்டம் நடத்தினர்.இப்போராட்டத்தில் மருத்துவர்களும் கலந்து கொண்டனர். உச்சநீதிமன்றத்தின்கண்டிப்பைத் தொடர்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
இட ஒதுக்கீட்டுக்கான போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களையும்,மருத்துவர்களையும் டாக்டர் வேணுகோபால்தான் தூண்டி விட்டார். இதையடுத்துஅவருக்கும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாசுக்கும்மோதல் எழுந்தது.
பிரதமர் மன்மோகன்சிங்கை நேரில் சந்தித்து டாக்டர் வேணுகோபால், அமைச்சர்அன்புமணி மீது புகார் தெரிவித்தார். அத்தோடு நீண்ட விடுப்பிலும் சென்றார்.வேணுகோபால் கூறிய புகார்களுக்கு பிரதமரை நேரில் சந்தித்து விளக்கம் அளித்தார்அன்புமணி. போராட்டத்தை தூண்டிய வேணுகோபால் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அப்போது பிரதமரிடம் அன்புமணி கூறிவிட்டு வந்தார்.
இந்த சர்ச்சைகள் சற்றே அமைதியானது போல தோன்றிய நிலையில், புதன்கிழமைமருத்துவமனையின் நிர்வாகக் குழுக் கூட்டம் அன்புமணி தலைமையில் கூடியது.
கூட்டத்தில் பாஜக தலைவர் வி.கே.மல்ஹோத்ரா உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் 17 உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
3 மணி நேரம் நடந்த கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி,இக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் இக்கூட்டத்தில் எடுக்கப்பட்டன. அதில் டாக்டர்வேணுகோபால் பணி நீக்கம் ஒன்று.
மருத்துவமனையின் நடத்தை விதிமுறைகளை மீறும் வகையில் அவர் நடந்துகொண்டதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பிரதமரின் ஒப்புதலைப் பெற இந்தமுடிவு அவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த முடிவுக்கு 14 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர், 3 பேர் மட்டும்ஆட்சேபனை தெரிவித்தனர் என்றார். அதில் ஒருவர் பாஜக தலைவர் மல்ஹோத்ரா.
இது குறித்து மல்ஹோத்ரா கூறுகையில், டாக்டர் வேணுகோபாலை நீக்கியதுநியாயமற்றது. இந்த முடிவு குறித்து கூட்ட நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடவில்லை.திடீரென்று டாக்டர் வேணுகோபாலை நீக்குவது தொடர்பான துணை தீர்மானத்தைஅமைச்சர் அன்புமணி தாக்கல் செய்தார்.
அதுவரை கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த டாக்டர் வேணுகோபாலையும்கூட்டத்திலிருந்து வெளியேறுமாறு அன்புமணி உத்தரவிட்டார். வேணுகோபாலிடம்விளக்கம் கூட கேட்க அமைச்சர் விரும்பவில்லை. இது மிகவும் தவறான நடவடிக்கை.வேணுகோபாலை அவமதித்து விட்டார்கள்.
வேணுகோபாலை நீக்குவதற்கு கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில்பெரும்பாலானவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மிகவும் மோசமான நடவடிக்கையாகஇதை நான் கருதுகிறேன். எமர்ஜென்சி காலத்தில் கூட இப்படி நடந்ததில்லை என்றார்மல்ஹோத்ரா.
இதற்கிடையே டாக்டர் வேணுகோபாலை டிஸ்மிஸ் செய்ததைக் கண்டித்துஎஐஐஎம்எஸ் மருத்துவமனையின் சில டாக்டர்களும், மருத்துவ மாணவர்களும்போராட்டத்தில் குதித்துள்ளனர். இட ஒதுக்கீட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தியஅதே பிரிவினர் தான் இப்போது வேணுகோபாலுக்கு ஆதரவாக போராட்டத்தில்ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பதவி நீக்கத்தை எதிர்த்து வேணுகோபால் வழக்கு:
இந் நிலையில் தனது பதவி நீக்கத்தை எதிர்த்த வேணுகோபால் டெல்லி உயர்நீதிமன்ற்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
வேணுகோபால் சார்பில் முன்னாள் சட்ட அமைச்சரும், பாரதீய ஜனதா தலைவர்களில் ஒருவரான அருண் ஜேட்லி ஆஜராகலாம் என்றுஎதிர்பார்கப்படுகிறது. வேணுகோபால் நீக்கத்திற்கு ஏற்கனவே பாரதீய ஜனதா எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications