பட்ஜெட்: தமிழக அமைச்சரவை கூடியது
சென்னை:
2006-07ம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிவிப்புகளை இறுதி செய்ய இன்று முதல்வர் கருணாநிதி தலைமையில்அமைச்சரவை கூடியது.
வரும் 22ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்துதுறை அமைச்சர்கள், செயலாளர்களுடன் கருணாநிதியும் நிதியமைச்சர் அன்பழகனும் ஆலோசனை நடத்திவந்தனர்.
இந் நிலையில் இன்று காலை தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இதில் பட்ஜெட்திட்டங்கள் இறுதி செய்யப்பட்டதாகத் தெரிகிறது. குறிப்பாக இலவச டிவி, ஏழைகளுக்கு 2 ஏக்கர் நிலம் உள்ளிட்டதிட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
கருணாநிதி-ரிசர்வ் வங்கி கவர்னர் சந்திப்பு:
இந் நிலையில் கருணாநிதியை ரிசர்வ் வங்கி கவர்னர் வேணுகோபால் ரெட்டி நேற்று சந்தித்துப் பேசினார்.அப்போது தமிழக விவசாயிகளுக்கு கூடுதல் பயிர்க் கடன் வழங்குவது குறித்து அவருடன் கருணாநிதிவிவாதித்தார்.
![]() |













Click it and Unblock the Notifications