ஈழத் தமிழர் ஆதரவு பேரணி: ரஜினி, கமல் பங்கேற்க வேண்டும்-திருமாவளவன்
சென்னை:
இலங்கைத் தமிழர்களை பாதுகாக்க நடக்கும் பேரணியில் ரஜினி, கமல் ஆகியோர் பங்கேற்க வேண்டும் எனவிடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருமாவளவன் கூறியதாவது:ஈழத் தமிழர்களை பாதுகாக்க அனைத்துக் கட்சியினரும் பங்கேற்கும் மனித நேய பேரணி மற்றும் பொதுக்கூட்டம் சென்னையில் நாளை நடக்கிறது. இந்தப் பேரி மன்றோ சிலையில் தொடங்கும். பெரியார், அண்ணாசிலை வழியாக சேப்பாக்கத்தில் முடிவடையும்.
இதைத் தொடர்ந்து மைலாப்பூர் மாங்கொல்லையில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் தமிழர் தேசிய இயக்கத்தலைவர் பழ.நெடுமாறன், மதுரை ஆதீனம், மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் டாக்டக் சேதுராமன்ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இந்தப் பேரணி, பொதுக் கூட்டத்தில் சினிமா துறையினரும் பங்கேற்க வேண்டும். இதற்காக ரஜினிகாந்த்,கமல்ஹாசன், விஜய்காந்த், சத்யராஜ், விஜய், மணிவண்ணன். பாரதிராஜா ஆகியோரை தொலைபேசியில்தொடர்பு கொண்டேன்.
ஆனால், வெளிநாடுகளில் உள்ளதாகவும், பிஸியாக இருப்பதாகவும் பதில் கிடைத்தால் அவர்களுடன் பேசமுடியவில்லை.
ரஜினி, கமல் உள்ளிட்டவர்கள் ஈழத் தமிழ்ழர் பாதுகாப்பு பேரணியில் பங்கேற்க வேண்டும். தங்கள் உணர்வுகளைவெளிப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன்.
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக மத்திய அரசு தலையிட வேண்டும், சிங்கள ராணுவத்துக்கு எந்த வகையிலும்உதவக் கூடாது என்று வலியுறுத்தியே இந்த பேரணி நடக்கிறது என்றார்.












Click it and Unblock the Notifications