கருணாநிதிக்கு விஜய்காந்த் கண்டனம்
கரூர்:
காரைக்கால் நகராட்சியில் எங்கள் கட்சிக்கு அமோக வெற்றி கிடைத்திருப்பதை முதல்வர் கருணாநிதி விமர்சனம்செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என தேமுதிக தலைவர் விஜய்காந்த் கூறியுள்ளார்.
திருச்சியில் தர்மபுரி படப்பிடிப்பு நடந்து வருகிறது. சூட்டிங் ஸ்பாட்டில் நிருபர்களிடம் விஜய்காந்த் பேசுகையில்,தேமுதிகவை அரசியல் களத்தில் இருந்து அகற்றிவிட நினைக்கிறார்கள். அது யாராலும் முடியாது. கட்சியைவளர்க்க மேலும் தீவிரமாக செயல்படுவேன். யாரையும் குறை சொல்லி அரசியல் நடத்த விரும்பவில்லை.
அதே நேரத்தில் குறைகளையும் தவறுகளையும் சுட்டிக் காட்ட தயங்க மாட்டேன். பாண்டிச்சேரியில் காரைக்கால்நகராட்சியில் எங்கள் கட்சி அமோக வெற்றி பெற்று தலைவர் பதவியை பிடித்துள்ளது பெரும் சாதனையாகும்.
ஆனால், இந்த வெற்றியை முதல்வர் கருணாநிதி விமர்சனம் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. எங்கள் கட்சியின்வெற்றியை திசை திருப்பும் முயற்சி இது. தேமுதிகவுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் கருணாநிதிக்குஏற்பட்டிருப்பதே எங்களுக்கு வெற்றி தான்.
தேர்தலுக்குப் பின் சிமெண்ட், மணலின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இதன் ரகசியம் புரியவில்லை.இதனால் கட்டுமானப் பணிகள் முடங்கிப் போய் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திமுக ஆட்சி குறித்து இப்போது ஏதும் கூற முடியாது. பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications