அதிமுக புது கொ.ப.செ. பழனிச்சாமி; மேலும் 6 மா.செக்கள் நீக்கம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அதிமுக கொள்கை பரப்புச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமிநியமிக்கப்பட்டுள்ளார். இதுதவிர மேலும் 9 மாவட்ட செயலாளர்களையும்அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா நீக்கியுள்ளார்.

அதிமுக கொள்கை பரப்புச் செயலாளராக இருந்து வந்த ஓ.எஸ்.மணியன் நேற்றுஅதிரடியாக நீக்கப்பட்டார். இதுதவிர கோவை, நீலகிரி, நாமக்கல், நாகை மாவட்டஅதிமுக செயலாளர்களும் நீக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து இன்று மேலும் 9 மாவட்டச் செயலாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.புது கொள்கை பரப்புச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளராக ஆதி ராஜராஜாம்நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதுவரை தென் சென்னை மாவட்ட செயலாளராகஇருந்து வந்தார்.

அதிமுக மாணவர் அணிச் செயலாளர் வி.பி.கலைராஜன் அப்பொறுப்பிலிருந்துநீக்கப்பட்டு தென் சென்னை மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளராக இருந்து வந்த முன்னால் அமைச்சர்விஜயலட்சுமி பழனிச்சாமி நீக்கப்பட்டு அவருக்குப் பதில் வெங்கடாச்சலம்நியமிக்கப்படடுள்ளார்.

விஜயலட்சுமி பழனிச்சாமி அமைப்புச் செயலாளர் பொறுப்பில் தொடருவார்.கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக செயலாளர் அசோக் குமார் நீக்கப்பட்டு புதியசெயலாளராக கே.பி.முனுசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுரை மாநகர மாவட்ட செயலாளர் ஏ.கே.போஸ் எம்.எல்.ஏ. நீக்கப்பட்டுஅவருக்குப் பதில் ராஜன் செல்லப்பா நியமிக்கப்பட்டுள்ளார்.

சேலம் புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் பழனிச்சாமி நீக்கப்பட்டுள்ளார்.அவருக்குப் பதில் முன்னாள் எம்.எல்.ஏ. செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார்.

சேலம் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் இளங்கோவன் நீக்கப்பட்டுஅப்பொறுப்பில் முன்னாள் அமைச்சர் டி.எம். செல்வகணபதி நியமிக்கப்பட்டுள்ளார்.

கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் பி.வி.தாமோதரன் தூக்கப்பட்டுஅப்பொறுப்பில் பொள்ளாச்சி ஜெயராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.

வீரபாண்டி சட்டசபைத் தொகுதி சேலம் புறநகர் கிழக்கு மாவட்டத்தில் இதுவரைஇருந்து வந்தது. நிர்வாக வசதி கருதி இதை சேலம் புறநகர் மேற்கு மாவட்டத்தில்இணைக்கப்படுவதாக ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+