அக்னி -3 ஏவுகனை சோதனை வெற்றி!

Subscribe to Oneindia Tamil

புவனேஸ்வர்:

இந்தியாவின் நீண்ட தொலைவு ஏவுகனையான அக்னி-3 ஏவுகனை இன்றுவெற்றிகரமாக ஏவி பரிசோதிக்கப்பட்டது.

அணு ஆயுதங்களைத் தாங்கிச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள அதிநவீன அக்னி-3 ஏவுகனை இன்று ஒரிசா மாநிலம், பத்ராக் அருகே உள்ள வீலர் தீவில்வெற்றிகரமாக ஏவி பரிசோதிக்கப்பட்டது.

பாதுகாப்பு அமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் 300க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள்அக்னி-3 ஏவுகனை வெற்றிகரமாக செலுத்தப்பட்டதைப் பார்த்தனர்.

அக்னி-3 ஏவுகனையின் தாக்குதல் தொலைவு 3500 கிலோமீட்டர் ஆகும். இதில் அணுஆயுதங்களை பொருத்த முடியும். சீனாவின் பெய்ஜிங், ஷாங்காய் ஆகியநகரங்களைத் தாக்க முடியும்.

இந்தியாவின் அதி நவீன, அதி தொலைவு ஏவுகனை வரிசைகளில் அக்னி-3 முதல்இடத்தைப் பிடித்தாலும் கூட சீனாவின் ஏவுகனைகளுக்கு முன்பு நாம் மிகவும் சிறியஇடத்தில்தான் இன்னும் இருக்கிறோம்.

அக்னி3 ஏவுகனை சோதனை 2 முறை திட்டமிடப்பட்டு இரண்டு முறையும்ஒத்திவைக்கப்பட்டது. இந்தியாவுக்கும், அமெரிக்காவும் இடையில் ஏற்பட்டுள்ளஅணு ஒப்பந்தம் பாதிக்கப்பட்டு விடக் கூடாதே என்பதுதான் இதற்கு முக்கியக்காரணம்.

தற்போது அணு சக்தி ஒப்பந்தம் முடிவடைந்து விட்டதைத் தொடர்ந்து அக்னி-3ஏவப்படடு பரிசோதிக்கப்பட்டுள்ளது.

இந்தியா தொடர்பான செய்திகள்பு தயாரித்துள்ள அக்னி1, அக்னி2 ஆகியவை முழுமையானஅளவில் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. ராணுவத்தில் படிப்படியாக சேர்க்கப்பட்டுவருகின்றன.

அக்னி-3 வெற்றிகரமாக ஏவப்பட்டதற்கு குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், பிரதமர்மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் விஞ்ஞானிகளுக்குவாழ்த்து தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+