இலக்கை தாக்கத் தவறியது அக்னி-3 ஏவுகனை!

Subscribe to Oneindia Tamil

தம்ரா:

இந்தியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் அதி நவீன அக்னி-3 ஏவுகனைஇலக்கைத் தாக்கத் தவறியதால் இந்த சோதனை தோல்வி அடைந்துள்ளதாகவிஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இந்தியாவின் அதி நவீன நீண்ட தொலைவு ஏவுகனையான அக்னி வரிசையில் 3வதுஏவுகனையை இந்தியா முழுக்க முழுக்க சொந்தத் தொழில்நுட்பத்தில் தயாரித்துள்ளது.அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் வகையில் அக்னி-3 வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒரிசா மாநிலம் வீலர் தீவு பகுதியிலிருந்து அக்னி-3 ஏவப்பட்டது. வெற்றிகரமாகஏவப்பட்ட அக்னி-3 குறிப்பிட்ட இலக்கு வரை சரியாக செல்லும் என்றுஎதிர்பார்க்கப்பட்டது.

Agni-3 missle
ஆனால் விண்ணில் 12 கிலோமீட்டர் தொலைவு சென்றதுமே ஏவுகனையில்தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு அது வங்கக் கடலில் விழுந்தது.

முதலில் ஏவுகனை சோதனை வெற்றி என்று டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானிகள் அறிவிப்புவெளியிட்டிருந்தனர். ஆனால் அது தோல்வி அடைந்தது குறித்து அதிகாரப்பூர்வசெய்தி ஏதும் வெளியாகவில்லை.

அக்னி-3 செங்குத்தாக பாய்ந்தபோது, எரிபொருள் நிரப்பப்பட்ட இரண்டாவது பகுதி,ஏவுகனையிலிருந்து பிரியவில்லை. இதனால்தான் இலக்கை நோக்கி போக முடியாமல்கடலில் விழுந்து விட்டது.

அக்னி-3 ஏவுகனை 3500 கிலோமீட்டர் தொலைவு வரை பறந்து சென்று தாக்கக் கூடியவல்லமை படைத்தது. ஏவுகனை சோதனை தோல்வியில் முடிந்தாலும் கூட தவறைகண்டுபிடித்து சரி செய்யும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளதாக விஞ்ஞானிகள்தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+