For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மும்பையில் 8 ரயில்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு: 137க்கும் மேற்பட்டவர்கள் பலி

By Staff
Google Oneindia Tamil News

மும்பை:

மும்பையில் இன்று மாலை 8 புறநகர் ரயில்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில் 137 பேர் வரைபலியாகியுள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

கார், மாகிம், பாந்த்ரா, பையாந்தர், ஜோகேஸ்வரி, போரிவெலி, மாதுங்கா உள்ளிட்டபகுதிகளில் இந்த குண்டுவெடிப்புகள் நடந்தன. மாலை நேரத்தில் அலுவலகங்கள்,பள்ளிகள் முடிந்து மக்களும் குழந்தைகளும் வீடுகளுக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது ஓடும் ரயில்களில் குண்டுகள் வெடித்தன.

இதில் 137 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும் நூற்றுக்கணக்கானவர்கள்காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் 260 பேர் மும்பையின் பல்வேறுமருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முதல் குண்டு கார் ரயில் நிலையம் அருகே ரயிலில் வெடித்தது. இதைத் தொடர்ந்துஅடுத்தடுத்து ரயில்களில் குண்டுகள் வெடித்தன.

குண்டுவெடிப்பு நடந்த ரயில்களையும் ரயில் நிலையங்களையும் ரயில்வேபோலீஸாரும், மும்பை நகர போலீஸாரும் முற்றுகையிட்டு சீல் வைத்துள்ளனர்.மீட்புப் பணிகள் துரித கதியில் முடுக்கி விடப்பட்டுள்ளன. மேற்கு ரயில்வேயின்அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மாதுங்கா ரயில் நிலையத்தில் வெடித்த குண்டுதான் மிகவும் சக்தி வாய்ந்ததாககூறப்படுகிறது. இங்குதான் உயிர்ச் சேதம் மிக அதிகமாக உள்ளது.

அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததால் மும்பை நகரம் முழுவதும் பெரும் பீதியும்,பதட்டமும் நிலவுகிறது. மொபைல் போன்கள் சேவை செயலிழந்துள்ளது. நகர்முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

குண்டு வெடித்த ரயில் பெட்டிகள் சிதறிப் போயுள்ளன. அதில் உடல்கள் சிதறிக்கிடக்கின்றன.

சம்பவம் நடந்த இடங்களுக்கு அதிக அளவில் அரசுப் பேருந்துகள்இயக்கப்படுகின்றன. ரயில்களில் இருந்து பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டுபேருந்துகளில் ஏற்றி அவரவர் இருப்பிடங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.

குண்டுவெடிப்பில் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 லட்சமும்,காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000மும் வழங்கப்படும் என மகாராஷ்டிரமுதல்வர் விலாஸ்ராவ் தேஷ்க் அறிவித்துள்ளார்.

மும்பை குண்டுவெடிப்புச் சம்பங்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் கடும் கண்டனம்தெரிவித்துள்ளனர். பயங்கரவாத்தை பரப்பும் இதுபோன்ற கோழைத்தனமானசெயல்களை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது. தீவிரவாதிகள் கடுமையாகதண்டிக்கப்படுவர் என்று தெரிவித்துள்ளார் சிங்.

மும்பை நிலவரம் குறித்து உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலுடன் மன்மோகன்சிங் அவசர ஆலோசனை நடத்தினார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும்மும்பைக்கு விரைகிறார்.

பொரிவிலி ரயில் நிலையத்திற்கு அருகே ரயிலில் 2 குண்டுகள் வெடித்துள்ளன.மிகவும் சக்தி வாய்ந்த ஐ.இ.டி. ரக குண்டுகள் இந்த பயங்கரவாத தாக்குதலில்பயன்படுத்தப்பட்டுள்ளன. பொரிவிலி ரயில் நிலையத்தில்வைக்கப்பட்டிருந்தஇன்னொரு வெடிகுண்டை வெடிகுண்டு நிபுணர்கள் கண்டுபிடித்து செயலிழக்கச்செய்தனர். இதனால் மேலும் உயிரிழப்பு ஏற்படுவது தவிர்க்கப்பட்டது.

மும்பை குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, டெல்லி, கொல்கத்தா, சென்னை, பெங்களூர்,ஹைதராபாத் உள்ளிட்ட அனைத்து முக்கிய பெருநகரங்களிலும் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து நகரங்களிலும் உஷார் நிலைஅறிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தகவல்கள் அறிய தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண்: 022- 22005388. காயமடைந்தவர்களில்பெரும்பாலானவர்கள் லீலாவதி மருத்துவமனையிலும் (தொலைபேசி எண்:26438281), இந்துஜா மருத்துவமனையிலும் (24451515) அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிவசேனா தலைவர் பால் தாக்கரேவின் மனைவி மீனா தாயின் சிலையில் சேறு பூசியசம்பவத்தின் பின்னணியிலும் தீவிரவாதிகளின் சதியே இருக்கலாம் என இப்போதுசந்தேகிக்கப்படுகிறது. இந்த விவகாரத்தைக் கிளப்பி, போலீஸாரின் கவனத்தை திசைதிருப்பி அதைப் பயன்படுத்தி குண்டுகளை வைக்கும் வேலையில் தீவிரவாதிகள்ஈடுபட்டிருக்க வேண்டும் என போலீஸார் கருதுகின்றனர்.

மீனாதாய் சிலை அவமதிப்பு தொடர்பாக கடந்த சில நாட்களாக மும்பையின் பலபகுதிகளில் வன்முறை தலைவிரித்தாடியது. இந் நிலையில் இந்த குண்டுவெடிப்புகள்நடந்துள்ளன.

இந்த குண்டுவெடிப்புக்கு பாகிஸ்தானின் லஷ்கர்-ஏ-தொய்பாவே காரணம் என்றுசந்தேகிக்கப்படுகிறது. ஆனால், இந்தச் சம்பவத்துக்கும் தாங்களுக்கும் தொடர்பில்லைஎன லஷ்கர் மறுத்துள்ளது.

இன்று மாலை 6 மணி முதல் ஆறரை மணிக்குள் 8 குண்டுவெடிப்புச் சம்பங்களும்நடந்தன.

முன்னதாக இன்று பகலில் காஷ்மீரிலும் 5 இடங்களில் இன்று அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன.

ஸ்ரீநகரில் நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பங்களுக்கும், மும்பைகுண்டுவெடிப்புச் சம்பங்களுக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை என்றுமகாராஷ்டிர மாநில டிஜிபி தெரிவித்துள்ளார். பொதுமக்கள் அமைதியாகஇருக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குண்டுவெடிப்பில் 137 பேர் கொல்லப்பட்டதாகவும், 260 பேர்காயமடைந்துள்ளதாகவும் மும்பை போலீஸ் தெரிவித்துள்ளது. ஆனால், இந்தஎண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இதற்கிடையே, பாகிஸ்தான் அதிபர் முஷாரப் குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்குக்கண்டனம் தெரிவித்துள்ளார்.

மும்பை வெடிகுண்டுச் சம்பங்களைத் தொடர்ந்து டெல்லியில் போலீஸார் தீவிரசோதனை நடத்தினர். இதில் ஜங்க்புரா பகுதியில் ஒரு நபர் பிடிபட்டுள்ளார். அவரிடம்ரகசிய இடத்தில் வைத்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாடு முழுவதும்உள்ள விமான நிலையங்களிலும் அதிகபட்ச உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்களிலும் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X