தந்தையைக் கொன்று சூட்கேஸில் வைத்துவீசிய மகன்கள்!
தென்காசி:
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தந்தையைக் கொலை செய்து அவரது உடலை சூட்கேஸில்அடைத்து பின்னர் குற்றாலத்தில் வீசிய மகனை போலீஸார் கைது செய்தனர்.இன்னொரு மகனை தேடி வருகிறார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன் கோவில் அருகே உள்ள செம்பட்டையன்கால்கிராமத்தைச் சேர்ந்தவர் கணபதி என்கிற சிந்தாமணி. இவரது மனைவிஇலஞ்சியம்மாள்.
![]() |
65 வயதான கணபதி, தனது சொத்துக்களை ஐந்து மகன்களுக்கும் சரி பாதியாகபிரித்துக் கொடுத்து விட்டு கடைசி மகன் ராஜாவுடன் சேர்ந்து வசித்து வந்தார்.
தான் புதிதாக வாங்கியுள்ள நிலத்தில் ராஜா ஆழ்துளைக் குழாய் கிணறு தோண்டினார்.அங்கு அதிக அளவில் தண்ணீர் வந்ததால், மற்ற நான்கு சகோதரர்களும், தங்களதுநிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச தண்ணீர் தருமாறு கோரியுள்ளனர்.
ஆனால் இதற்கு ராஜாவும், கணபதியும் மறுத்து விட்டனர்.
இதனால் அவர்களிடையே மனக் கசப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 28ம் தேதிதோட்டத்திற்குச் சென்ற கணபதி வீடு திரும்பவில்லை.
இதையடுத்து கிருஷ்ணன் கோவில் காவல் நிலையத்தில் ராஜா புகார் கொடுத்தார்.போலீஸ் விசாரணையில், கணபதி காணாமல் போன நாளிலிருந்து ராமமூர்த்தியையும்காணவில்லை என்பது தெரிய வந்தது.
மேலும் கணபதியை கடைசியாக ராமமூர்த்தி மற்றும் தாமஸ் ஆகியோர் சந்தித்ததும்தெரிய வந்தது. இதையடுத்து தாமஸை பிடித்து போலீஸார் விசாரித்தனர். அப்போதுதிடுக்கிடும் தகவல் வெளியானது.
கணபதியை கடந்த 28ம் தேதி தோட்டத்திற்குச் சென்று தாமஸ்தான் கழுத்தை இறுக்கிக்கொலை செய்துள்ளார். பின்னர் சடலத்தை சூட்கேஸில் வைத்து தாமஸும்,ராமமூர்த்தியும், தங்களது சகோதரர் விஜயக்குமார் வீட்டுக்குக் கொண்டு வந்துள்ளனர்.பின்னர் ஒரு ஆட்டோவில் குற்றாலத்திற்குக் கிளம்பினர். பேரருவிக்குச் செல்லும்வழியில் உள்ள சிறுவர் பூங்காவிற்குள் சூட்கேஸைக் கொண்டு சென்று அருவி நீர்செல்லும் வழியில் தூக்கி வீசியுள்ளனர்.
போலீஸார் தாமஸை குற்றாலத்திற்கு அழைத்துச் சென்று பிணம் வீசப்பட்ட இடத்தைஅடையாளம் காட்டக் கூறினர். அந்த இடத்தில் சூட்கேஸில் கட்டப்பட்ட நிலையில்பிணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து தாமஸை போலீஸார் கைது செய்துள்ளனர். மற்றவர்கள்தலைமறைவாக உள்ளனர். இந்த சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications