பாஜகவுடன் திமுக ரகசிய பேச்சு?
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர திமுக விருப்பம் தெரிவித்துள்ளதாகபாஜக தலைவர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
ஆனால், அதை முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி மறுத்துள்ளார்.இதுதொடர்பாக கருணாநிதி விடுத்துள்ள அறிக்கையில், தேசிய ஜனநாயகக்கூட்டணியில் சேர திமுக போன்ற சில கட்சிகள் விருப்பம் தெரிவித்திருப்பதாக பாஜகதலைவர் ராஜ்நாத் சிங் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
திமுகவின் தற்போதைய நிலைப்பாட்டில் எந்தவித மாறுதலும் இல்லை. ஐக்கியமுற்போக்குக் கூட்டணியில் இணைந்தபோது திமுக எந்த மன நிலையில் இருந்ததோஅதே மன நிலைதான இப்போதும் நீடிக்கிறது.
இந் நிலையில் பாஜக கூட்டணியில் சேர திமுக முயற்சிப்பதாக அக்கட்சியின்தலைவர் ராஜ்நாத் சிங் கூறியிருப்பது உண்மைக்கு முற்றிலும் புறம்பான தகவல் என்றுகூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications