பினாமிகள் பெயரில் சசி நில மோசடி-கருணாநிதி
சென்னை:
மத்திய ஆட்சி கவிழ வேண்டும் என்ற ஒரு சிலரின் கனவு நிறைவேறாது என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக முரசொலியில் அவர் எழுதியுள்ள கேள்வி, பதில்:கேள்வி: நெய்வேலி பங்குகளை விற்பதில் அதன் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமென்றுநீங்கள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும், நிதியமைச்சருக்கும் கடிதம் எழுதியதற்கு, திமுகவினரும்,தொழிற்சங்கத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் என்று சில பத்திரிகைகளில் செய்தி வெளிவந்துள்ளதே?
கருணாநிதி: எதையும் தெளிவாகத் தெரிந்து கொண்டு செய்தி வெளியிட வேண்டுமென்ற அக்கறை சிலஏடுகளுக்கு வராத காரணத்தினால் ஏற்படுகின்ற தவறு இது. பங்குகளை விற்பதில் தொழிலாளர்களுக்குமுன்னுரிமை தர வேண்டும் என்று நான் கோரிக்கை எதுவும் வைக்கவில்லை.
தனியாருக்கு பங்குளைத் தருவதைத் தவிர்த்து விட்டு, தொழிலாளர்களுக்கே பங்குகளை வழங்கிட வேண்டும்என்று தான் கோரியிருந்தேன். அதை நடைமுறைப்படுத்துவதில் ஏற்படக் கூடிய சிக்கல்களைக் குறிப்பிட்டுத் தான்தொழிற்சங்கங்கள் அதற்கு உடன்படவில்லை. நானும் உடன்பட்டே தீர வேண்டும் என்று பிடிவாதம்காட்டவில்லை.
என்றைக்கும் தொழிலாளர்களின் உரிமைக் குரலுடன் ஒத்துப்போகக் கூடியவன் என்பதால் அவர்கள்கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தி பிரதமருக்கும், சோனியா காந்திக்கும், ப.சிதம்பரத்துக்கும் கடிதம்எழுதினேன்.
அதற்கிடையே நெய்வேலி பிரச்சினையை அரசியலாக்கி அந்த நெருப்பில் குளிர் காய்த் திட்டமிட்டுச் செயல்படும்தீய சக்திகளால் வன்முறைகள் எதுவும் தோன்றி விடக் கூடாதென்பதற்காக ஐக்கிய கூட்டணி அரசில் திமுகஅமைச்சர்கள் நீடிப்பது பற்றி யோசிப்பதாக சொன்னேனே தவிர, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு திமுகதரும் ஆதரவை விலக்கிக் கொள்ளப் போவதாக நான் சொல்லவே இல்லை.
பத்திரிகைகள் சிலவற்றில் திட்டமிட்டு அந்தப் பிரச்சாரம் நடைபெற்றதற்குக் காரணம் திமுகவும், ஐக்கியமுற்போக்கு கூட்டணிக்குமிடையே கசப்பு தோன்றாதா, அது கடுமையாகி மத்திய அரசு கவிழாதா? அப்படிஏதாவது நடந்தால் தானே தமது வர்ணாஸ்ரம, மதவாத அரசு ஒன்றை மத்தியிலே அமைக்க முடியம் என்றகனவில் மிதந்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்களின் எண்ணம் ஈடேறப் போவதில்லை என்பதற்கு இடதுசாரிக் கட்சிகளின் சார்பில் அளிக்கப்படுகிறவிளக்கங்களும், அவற்றுக்கு ஏற்றாற்போல நமது இயக்கம் காட்டி வரும் உறுதியும் அசைக்க முடியாததும்நம்பிக்கை நிறைந்ததுமான சான்றுகளாகும்.
சிறுதாவூர் தலித் நிலங்கள் அபகரிப்பு:
கேள்வி: தரிசு நிலங்களை மேம்படுத்தி ஏழை விவசாயக் குடும்பங்களுக்கு அளிக்க இருக்கும் இந்த அரசு,அண்ணா முதலமைச்சராக இருந்தபோது தலித் மக்களுக்கு வழங்கிய நிலங்கள் இப்போது சிலரால்அபகரிக்கப்ட்டுள்ளதை மீண்டும் தலித் மக்களுக்கு மீட்டுக் கொடுக்க முன்வருமா?
கருணாநிதி பதில்: சென்னையிலிருந்து பழைய மாமல்லபுரம் சாலையில் 50 கி.மீ. தொலைவில் உள்ளது சிறுதாவூர்கிரமாம். காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு வட்டம் திருப்போரூர் ஒன்றியதில் உள்ள இக்கிராமத்தில் உள்ளதலித் மக்களில் பெரும்பாலானோர் விவசாய கூலித் தொழிலாளர்களாவர்.
1967ம் ஆண்டு முதலமைச்சரான அண்ணா ஆட்சியில், தலித் மக்களில் 20 பேர் குலுக்கல் முறையில் தேர்வுசெய்யப்பட்டு அன்றே அவர்களுக்கு நிலம் ஒப்படைக்கப்பட்டது.
பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய தலித் மக்கள் என்பதால் நிலத்தை பண்படுத்தியம், பாதுகாப்பும் செய்துவைத்துக் கொள்ள முடியவில்லை. இந் நிலையில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, சிறுதாவூரில் சொகுசு பங்களாமற்றும் தோட்டம் அமைக்கும் பணியில் ஈடுபடுகிறார்.
மேற்கண்ட தலித் மக்களின் 53 ஏக்கர் நிலம் திருமதி சசிகலாவின் பங்களா தோட்டம் அமைந்துள்ளநிலத்தையொட்டி வடக்கு திசையில் உள்ளது என்பது கூறிப்பிடத்தக்கது.
அந்த தலித் மக்கள் தங்கள் நிலத்தில் வழக்கம் போல் விவசாயம் செய்யப் போகும்போது சசிகலாவின் தோட்டத்துஆட்களால், மிரட்டப் பட்டுள்ளனர். நிலத்தை இழந்த சிறுதாவூர் தலித் மக்கள் தங்கள் நிலத்தில் 2001-2002ஆண்டு காலத்தில் அம்பேத்கர் சிலை வைத்தும் வீடுகள் கட்டியும் இடத்தை மீட்கும் நடவடிக்கையில் இறங்கினர்.
ஆனால் இரவோடு இரவாக குடிசைகளும், அம்பேத்கர் சிலையும் நில ஆக்கிரமிப்பாளர்களால் அகற்றப்பட்டுவிட்டது. 2005ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மாவட்ட ஆட்சியராக இருந்த வெங்கடேசனிடம் நிலத்தை மக்கள்சார்பில் மனு கொடுத்து தங்கள் நிலத்தை மீட்டுத்தரக் கோரினர்.
நிலம் தங்களால் விறபனை செய்யப்படாமலேயே மோசடியாக தங்களது பட்டாக்கள் பெயர் மாற்றம்செய்யப்பட்ள்ளதை அறிந்து மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அண்ணா அரசு தலித் மக்களுக்கு இலவசமாக கொடுத்த நிலங்களை அண்ணா பெயரில் கட்சி நடத்தும் அதிமுகஆட்சியில் மோசடியாக பினாமிகள் பெயரில் நில மாற்றம் செய்து கொள்ளையடித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications