வியாபாரியை கடத்தி சித்ரவதை- பெண் கைது
சென்னை:
வியாபாரியைக் கடத்தி, சித்ரவதை செய்த பெண் கைது செய்யப்பட்டார்.
![]() |
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அந்த வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்தது. உடனேபூட்டை உடைத்து போலீசார் உள்னே சென்றனர். உள்ளே உயிருக்கு போராடிய நிலையில் இருந்த வாலிபரைமீட்டு காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.
அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது,
என் பெயர் சையது காலிப் (30). கொடுங்கையூரை சேர்ந்தவன். இரும்பு மொத்த வியாபாரம் செய்து வருகிறேன்.நேற்று என்னிடம் ஒரு பெண் போனில் பேசினார். தனது பெயர் லதா என அறிமுகம் செய்து கொண்டார்.
கல்தான் என்பவர்தான் உங்களது நம்பரை கொடுத்து தொடர்பு கொள்ள சொன்னார் என்றார். உடனே நான்,என்ன விஷயம் என்று கேட்டேன். உடனே அவர் பழைய இரும்பு பொருட்களை குறைந்த விலையில் வாங்கித்தருகிறேன். தற்போது நான் வெளிநாடு செல்ல உள்ளேன். ஆகையால் உடனே மீனம்பாக்கம் விமானநிலையத்துக்கு வாருங்கள் என்றார்.
உங்களை எப்படி அடையாளம் கண்டு கொள்வது என்று கேட்டதற்கு, சிவப்பு கலர் சேலை உடுத்திருக்கிறேன்என்றார். உடனே மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு விரைந்தேன். அங்கு அவரை பார்த்ததும் எங்களதுஜெனரல் மேனேஜர் வீடு பம்மலில் உள்ளது. அங்கு தான் செல்ல வேண்டும் என்று கூறி பம்மலுக்கு அழைத்துவந்தார் லதா.
அங்கு போனதும் என்னை சிலர் திடீரென சூழந்துகொண்டு ஒரு ரூமில் போட்டு அடைத்து வைத்து சித்திரவதைசெய்தனர். உன் தம்பி எங்களிடம் ரூ. 3 லட்சம் வாங்கிக் கொண்டு ஏமாற்றுகிறான். உடனே ரூ. 5 லட்சம் கொடு,இல்லாவிட்டால் கொன்று விடுவோம் என்று மிரட்டினர். கத்தியால் இடது கையை வெட்டினர். மோதிரத்தைகழற்றிக் கொண்டனர்.
இந் நிலையில் இன்று காலையில் அனைவரும் டீ சாப்பிட கடைக்கு சென்றனர். அந்த நேரத்தில் நான் சத்தம்போட்டேன். இதை கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உங்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர் என்றார்.
காலிப் அடைத்து வைக்கப்பட்டிந்த வீட்டில் சோதனை நடத்தியபோது பாய், தலையணை, ரேஷன் கார்டு, ஐடிகார்டு ஆகியவை கிடைத்தன. ஐடி கார்டில் லதா என்ற செல்வி (45) எனவும், ஆலந்தூரையை சேர்ந்தவர் எனவும்தெரியவந்தது.
அக்கம்பக்கத்தில் போலீசார் விசாரித்தபோது வள்ளிதாசன் என்பவருக்கு சொந்தமான இந்த வீட்டில் கடந்தஒன்றரை மாதத்துக்கு முன்தான் சிலர் குடியிருந்ததாக தெரிவித்தனர். ஆனால் அந்த வீட்டில் யாரும்குடியிருந்ததற்கான அடையாளம் இல்லை. இந்த வீட்டுக்கு 6 பெண்கள் அடிக்கடி வந்து செல்வதாகவும்போலீசாருக்கு தெரியவந்துள்ளது. அது விபச்சார கும்பலாக இருக்கலாம் என்று தெரிகிறது.
இந் நிலையில் ஐடி கார்டில் இருந்த விலாசத்தை வைத்து லதாவை போலீசார் மடக்கிப் பிடித்தனர். இவர் தான்காலிப்பை விமான நிலையத்தில் இருந்து நைசாகப் பேசி அழைத்துச் சென்றவர் என்பதும் உறுதியாகியுள்ளது.ஐசக் என்பவரின் மனைவி தான் இந்த லதா.
அதே நேரத்தில் இந்த காலிப்பும் யோக்கியமானவர் இல்லை என்றும் தெரியவந்துள்ளது. இவரும் இவரது தம்பிநிசாரும் பண இரட்டிப்பு மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர். கள்ள நோட்டு புழக்கத்தில் விடும் வேலையும்செய்து வந்துள்ளனர். இவர்களிடம் லதா இரு ஆண்டுகளுக்கு முன் ரூ. 3 லட்சம் தந்து அதை இரட்டிப்பாக்கி தரச்சொல்லியுள்ளார்.
அவருக்கு ரூ. 6 லட்சம் தருவதாகக் கூறிவிட்டு காலிப்பும் நிசாரும் ஏமாற்றி வந்ததால் அவரை கடத்திச்சென்றுள்ளார். காலிப்பை அடைத்து வைத்து துன்புறுத்த செல்விக்குத் துணையாக இருந்த 4 பேரும்தப்பிவிட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஐசிஐசிஐ வங்கியில் கடன் வாங்கித் தரும் ஏஜென்டாக இருக்கும் லதாவுக்கு விபச்சார கும்பல்களுடனும்தொடர்புள்ளதாகத் தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications