அமெரிக்கா-செப் 11: இந்தியா-ஜூலை 11

Subscribe to Oneindia Tamil

மும்பை:

அமெரிக்காவுக்கு செப்டம்பர் 11 தாக்குதல் மாதிரி மும்பை ரயில் தொடர் குண்டு வெடிப்புச் சம்பவம்இந்தியாவுக்கு ஜூலை 11 தாக்குதலாக அமைந்துவிட்டதாக பாஜக தலைவர் அத்வானி கூறியுள்ளார்.

மும்பையில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,

தீவிரவாதத்துக்கு எதிராக மிக வலுவான, மிகக் கடுமையான சட்டங்கள் வேண்டும். நியூயார்க்கில் நடந்தசெப்டம்பர் 11 தாக்குதல் அமெரிக்காவுக்கு எதிரான தாக்குதல். அது போல இந்த ஜூலை 11 தாக்குதல்இந்தியாவுக்கு எதிரான தாக்குதலாகக் கருத்தப்பட வேண்டும்.

இந்திய பொருளாதார தலைநகரை சீர்குலைக்க நடந்துள்ள தாக்குதல் இது. கடந்த ஆண்டு இதே நேரத்தில் தான்லண்டனில் பாதாள ரயில்களில் தாக்குதல் நடந்தது. மும்பையில் நடந்துள்ள தாக்குதல் மிகவும் திட்டமிடப்பட்ட,தீவிரமான தாக்குதல். 15 நிமிடத்தில் அடுத்தடுத்து 8 இடங்களில் தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள்.

இதில் வெளிநாட்டு தீவிரவாதிகளுக்கு உள்நாட்டு தீவிரவாதிகள் உதவியிருக்க வேண்டும். இல்லாவிட்டால்இவ்வளவு துல்லியமான தாக்குதல் சாத்தியமில்லை. இந்த தீவிரவாத கட்டமைப்புகளை மத்திய, மாநில அரசுகள்உடைத்தெறிய வேண்டும். இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத அமைப்புகளை பாகிஸ்தான் இன்னும் ஒழித்துக்கட்டவில்லை என்பதும் இதன் மூலம் உறுதியாகிறது என்றார்.

சிமி துணை?:

இந் நிலையில் மும்பையில் நடந்த ரயில் குண்டு வெடிப்புகள் சிமி எனப்படும் இஸ்லாமிய மாணவர் அமைப்பின் உதவியோடு நடந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

மும்பையில் சிமி இயக்கத்தினர் ஏராளமானோர் உள்ளனர். இவர்கள் தான் ரயில் பெட்டிகளில் குண்டுகளை வைத்திருக்க வேண்டும் என உளவுத்துறையினர்சந்தேகிக்கிறார்கள்.

இறந்தவர் குடும்பத்துக்கு ரயில்வே வேலை:

ரயில் குண்டு வெடிப்புகளில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. லட்சமும், குடும்பத்தில் ஒருவருக்கு ரயில்வேயில் வேலையும் வழங்கப்படும் என ரயில்வேஅமைச்சர் லல்லு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.

சம்பவ இடங்களை நேரில் பார்வையிட்ட அவர் கூறுகையில், மும்பை மின்சார ரயில் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு ரயில்வேத்துறையில் வேலை வழங்கப்படும். மேலும் அவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரண நிதியும் வழங்கப்படும்.

குண்டு வெடிப்பில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுவர்களுக்கு சிகிச்சை செலவையும் ரயில்வே அமைச்சகமே ஏற்றுக் கொள்ளும்என்றார். மேலும் குண்டு வெடிப்பில் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவர்களை நேரில் சந்தித்து லாலு ஆறுதல் கூறினார்.

போலீசுக்கு பால் தாக்ரே கண்டனம்:

இந் நிலையில் சிவசேனா தவைவர் பால் தாக்ரே வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மும்பையில் நடந்திருக்கும் தொடர் குண்டு வெடிப்பு உளவுத்துறையும், மும்பை போலீசும் செயல் இழுந்து விட்டதையே காட்டுகிறது.

இறந்தவர்கள் மீண்டும் உயிருடன் திரும்ப முடியாது. எனவே அனைவரும் அமைதி காக்க வேண்டும். புரளிகளை நம்ப வேண்டாம். காங்கிரஸ் தலைமையிலானகூட்டணி அரசு தவறான கொள்கையை கடை பிடிக்கிறது. எனவே மக்கள் இந்த அரசை தூக்கி எறிய வேண்டும்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியாக காந்தி, உள்துறை அமைச்சர் சிவராஜ் பட்டேல், ரயில்வே அமைச்சர் லல்லு பிரசாத் யாதவ்ஆகியோர் மும்பை வந்து குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டோரை சந்தித்தது ஆறுதல் கூறியிருக்கிறார்கள். விலை மதிப்பில்லா உயிர்கள்பறிக்கப்பட்டுள்ளன. இனி என்ன உதவிகளை செய்தாலும் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு முழுமையான ஆறுதலை வழங்க முடியாது என அவர் கூறியுள்ளார்.

குண்டு போட சொல்லும் சு.சுவாமி:

பாகிஸ்தானிலும், வங்கதேசத்திலும் உள்ள தீவிரவாதிகளின் மகாம்களை குண்டு வீசி அழிக்க வேண்டும் என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம்சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

தினமும் வெளிநாட்டிலிருந்து தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவி, குண்டுகளை வெடிக்கச் செய்வது வழக்கமாகிவிட்டது.

மும்பை புறநகர் ரயில் நிலையங்களில் குண்டுகளை வெடிக்கச் செய்து நூற்றுக்கணக்கானவர்களை கொன்றுள்ளனர்.

தீவிரவாதிகள் விஷயத்தில் இதுவரை இந்தியா மென்மையான அணுகுமுறையையே கடைப்பிடித்து வருகிறது. அதுதான் இத்தகைய அசம்பாவிதங்களுக்குக்காரணமாகும்.

உடனடியாக பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் உள்ள தீவிரவாத முகாம்களை குண்டு வீசித் தாக்க வேண்டும். பிரதமர் உடனடியாக இதைச் செய்யவேண்டும் என்று கூறியுள்ளார் சுவாமி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+