நடிகை நிர்மலாவுக்கு முன் ஜாமீன்
சென்னை:
சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பி.டி.மனோகரனின் மருமகள்மதுதேவி தற்கொலை வழக்கில் மனோகரன், டிவி நடிகை நிர்மலா உள்ளிட்ட 4பேருக்கும் சென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது.
![]() |
மேலும், மதுதேவியின் சகோதரரும், வரதட்சணை கொடுமை, டிவி நடிகையால்ஏற்பட்ட தொல்லைகள் ஆகியவைதான் தனது தங்கையின் தற்கொலைக்குக் காரணம்என போலீஸில் புகார் கொடுத்தார். இதையடுத்து மதுதேவியின் கணவர் நவீன் குமார்கைது செய்யப்பட்டார்.
மனோகரன், அவரது மனைவி கனகவல்லி, மகள் உமா, டிவி நடிகை நர்மலாஆகியோர் தலைமறைவாகி விட்டனர். இந்த நிலையில் நான்கு பேரும் முன்ஜாமீன்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
மனுவை விசாரித்த நீதிபதி பாஷா முன்னிலையில் ஆஜரான மதுதேவியின் சகோதரர்கணேஷ்பாபுவின் வழக்கறிஞர், வரதட்தணை கொடுமைப்படுத்தியே மதுதேவியைசித்திரவதை செய்துள்ளனர். மேலும் நடிகை நிர்மலா மிகப் பெரிய அளவில்மதுதேவியை இழிவுபடுத்தியுள்ளார். எனவே நான்கு பேருக்கும் முன் ஜாமீன் தரக்கூடாது என்று ஆட்சேபனை தெரிவித்தார்.
அரசுத் தரப்பு வழக்கறிஞர் இளங்கோவும் முன் ஜாமீன் தர எதிர்ப்புத் தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பாஷா, மதுதேவியின் கணவர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எனவே மற்றவர்களை கைதுசெய்வது தேவையற்றது என்று கூறி நான்கு பேருக்கும் முன் ஜாமீன் வழங்கிஉத்தரவிட்டார்.
இதில் பி.டி.மனோகரன் 2 வாரங்களுக்கு தினமும் போலீஸ் முன் ஆஜராக வேண்டும்.கனகவல்லி, உமா, நடிகை நிர்மலா ஆகியோர் 3 நாட்களுக்கு காவல் நிலையத்தில்ஆஜராக வேண்டும். அதன் பின்னர் போலீஸார் விசாரணைக்குக்கூப்பிடும்போதெல்லாம் வர வேண்டும் என்று நீதிபதி தனது உத்தரவில்தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?













Click it and Unblock the Notifications