ஜெயலலிதாவின் தரம், தகுதி: ராமதாஸ் பதிலடி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

டாக்டர் அன்புமணிக்கு அமெரிக்க அமைப்பு விருது வழங்குவதை சகித்துக் கொள்ளமுடியாமல், பொறாமையால் அவரை ஜெயலலிதா திட்டுவதாக பாமக நிறுவனர்டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

டாக்டர் அன்புமணிக்கு கேபினட் அமைச்சராக பதவி வகிக்கக் கூடிய அளவுக்குஅறிவோ, அனுபவமோ, தகுதியோ, தன்மையோ இல்லை.அவரை உடனடியாகஅமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதற்கு பாமகநிறுவனரும், அன்புமணியின் தந்தையுமான டாக்டர் ராமதாஸ் கண்டனம்தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், அமெரிக்க புற்றுநோய் எதிர்ப்புக்கழகம், அன்புமணி, அசாத்தியமான தலைமைப் பண்புடன் இந்திய மக்கள்நல்வாழ்வுத் துறையை நடத்தி வருகிறார் என்று பாராட்டியுள்ளது.

இதற்காக லூதர் எல் டெர்ரி என்ற விருது அன்புமணிக்கு வழங்கப்படவுள்ளது.புகையிலைப் பொருட்கள் எதிர்ப்பு இயக்கத்தில் ஒவ்வொரு நாடும் பின்பற்றவேண்டிய அளவுக்கு எடுத்துக் காட்டாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயல்படுகிறதுஎன்று விருதுக்கான பட்டயத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருது வருகிற 14ம் தேதி வாஷிங்டனில் நடைபெறவுள்ள மாநாட்டில்வழங்கப்படவுள்ளது. அதைப் பெற அன்புமணி அங்கு செல்கிறார்.

இளம் வயதிலேயே இத்தகைய சர்வதேச அங்கீகாரம் அன்புமணிக்குக் கிடைத்துவிட்டதே என்று பொறுத்துக் கொள்ள முடியாத ஜெயலலிதா, அவரைப் பற்றிவிமர்சித்துள்ளார்.

தாம் முதல்வராக இருந்தபோது, அந்தப் பதவிக்குரிய பக்குவம், அந்தஸ்து,தன்மையை மறந்து விட்டு, பிரதமர்கள், முன்னாள் பிரதமர்கள், காங்கிரஸ் தலைவர்சோனியா காந்தி, தமிழகத்தின் அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆகியோரைப்பற்றி தரக்குறைவாக, தனிப்பட்ட முறையில் விமர்சித்தவர் ஜெயலலிதா.

இதை தமிழகம் மறக்கவில்லை. அப்படிப்பட்ட அவர் தரம், தகுதி குறித்துப்பேசுவதற்கு தகுதி படைத்தவரே அல்ல என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+