போலீஸ் கல்யாணம்.. மாப்பிள்ளை ஓட்டம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முதலிரவு முடிந்ததும் தன்னை விட்டுவிட்டுச் சென்றுவிட்ட கணவன் மீது மனைவி போலீசில் புகார்கொடுத்துள்ளார்.

சென்னை ஆவடி ஓசிஎப் காலனியை சேர்ந்தவர் லட்சுமி (23). இவர் பிஎல் இறுதியாண்டு படிக்கிறார். அதேபகுதியைச் சேர்ந்த என்ஜினியர் விஸ்வநாதன் (25) என்பவரை 5 ஆண்டாக காதலித்து வந்தார்.

ஆனால், கடந்த 3 வாரமாக லட்சுமியை சந்திப்பதை விஸ்வநாதன் தவிர்த்தார். லட்சுமி விசாரித்த போது,விஸ்வநாதனுக்கு கோடம்பாக்கத்தை சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்தது தெரிய வந்தது.

இதையடுத்து தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாக விஸ்வநாதன் மீது ஆவடி மகளிர் போலீஸ் நிலையத்தில்லட்சுமி புகார் செய்தார். இதையடுத்து விஸ்வநாதனைப் பிடித்த பெண் போலீசார், அவரிடம் விசாரணைநடத்திதோடு மிரட்டவும் செய்துள்ளனர்.

பயந்து போன விஸ்வநாதன் லட்சுமியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறியுள்ளார். இதையடுத்து கடந்தசனிக்கிழமை போலீஸ் நிலையம் அருகில் உள்ள விஷ்ணு கோயிலில் வைத்து லட்சுமிக்கும், விஸ்வநாதனுக்கும்திருமணம் மகளிர் போலீசாரே திருமணமும் நடத்தி வைத்தனர்.

ஆனால், மறுநாள் பெற்றோரை பார்க்க செல்வதாக கூறிச் சென்ற விஸ்வநாதன் வீடு திரும்பவில்லை.

இந் நிலையில் விஸ்வநாதன் போலீஸ் கமிஷனரை சந்தித்து மனு கொடுத்துள்ளார். அதில் நானும், லட்சுமியும்காதலித்தது உண்மை. என் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், அவர்கள் பார்த்த பெண்ணையே திருமணம்செய்ய, கடந்த 28ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது.

அது தெரிந்ததும், லட்சுமியின் புகாரை வைத்து என்னை விசாரணைக்கு அழைந்து சென்றனர் மகளிர் போலீஸ்அதிகாரிகள், என்னை மிரட்டி லட்சுமியுடன் கட்டாய திருமணமும் செய்து வைத்தனர். எனவே அந்த போலீசார்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதை அறிந்த லட்சுமியும் நேற்று கமிஷனரை சந்தித்து மனு கொடுத்தார். அதில் லட்சுமி கூறியிருப்பதாவது,

பக்கத்து வீட்டில் வசித்த விஸ்வநாதனும், நானும் 5 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். இது அந்தப் பகுதியைச்சேர்ந்தவர்களுக்கு நன்றாக தெரியும். 2 பேரும் சேர்ந்து பல இடங்களில் சுற்றியுள்ளோம்.

3 ஆண்டுகளுக்கு முன்னர் விஸ்வநாதன் வெளிநாட்டுக்கு சென்றார். கடந்த மாதம் சென்னை திரும்பினார்.அதன்பின்பும், என்னுடன் சுற்றினார். என் அப்பா இறந்து விட்டார். அம்மா, தங்கை மட்டும் உள்ளனர். என்படிப்புச் செலவுக்கும் அடிக்கடி பணம் கொடுத்து உதவியிருக்கிறார் விஸ்வநாதன். இதனால் அவரையே எனதுகணவராக நினைத்து வாழ்ந்தேன். ஆனால், கடந்த 3 வாரமாக என்னை சந்திப்பதைத் தவிர்த்தார்.

அவருடைய நண்பர்களிடம் விசாரித்தபோது, கடந்த மாதம் 28ம் தேதி விஸ்வநாதனுக்கு கோடம்பாக்கத்தைச்சேர்ந்த நித்யா என்ற பெண்ணுக்கும் நிச்சயதார்த்தம் செய்துள்ளனர். இது எனக்கு அதிர்ச்சியைத் தந்தது

ஜனவரியில் திருமணம் செய்ய முடிவு செய்திருந்தனர். ஒரிரு நாட்களில் அவர் மீண்டும் வெளிநாடு செல்லதிட்டமிட்டிருந்தார். இது குறித்து அவரிடம் கேட்டபோது என் பெற்றோர் தற்கொலை செய்வதாகமிரட்டுகின்றனர். அதனால் பெற்றோர் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்கிறேன். உண்னையும் இரண்டாவதுதிருமணம் செய்துகொள்கிறேன் என்றார்.

அவர் என்னை ஏமாற்றுவது தெரிந்ததால் ஆவடி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தேன். இரண்டு வீட்டின்பெற்றோரையும் போலீசார் அழைத்து விசாரித்தனர். பின்னர் எங்களுக்கு திருமணம் செய்து வைத்தனர்.திருமணம் நடக்கும் போது அவரது பெற்றோர் விட்டுக்குச் சென்று விட்டனர். திருமணம் முடித்தவுடன் எங்கள்வீட்டுக்குத்தான நாங்கள் சென்றோம். அங்கு முதலிரவும் நடந்தது.

அதன்பின், பெற்றோரைப் பார்த்து சமாதானம் செய்து அழைத்து வருவதாக கூறிச் சென்றார். அதன்பின்னர்திரும்பி வரவில்லை என்று கூறியுள்ளார் லட்சுமி.

இதுகுறித்து ஆவடி உதவி கமிஷனர் விசாரணைக்கு கமிஷனர் லத்திகா சரண் உத்தரவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+