ஜெ-சசி பங்களா: தலித் நில ஆக்கிரமிப்பு குறித்து விசாரணை தொடங்கியது
சென்னை:
சிறுதாவூர் அருகே 169 ஏக்கரில் பண்ணை வீடு கட்ட பல தலித்களின் நிலங்களை முதல்வர் ஜெயலலிதாவும்தோழி சசிகலாவும் ஆக்கிரமித்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக அதிகாரிகள் விசாரணையைதொடங்கியுள்ளனர்.
இந்த நிலங்கள் தொடர்பான ஆவணங்களை அப் பகுதி பத்திரப் பதிவு அலுவலகத்தில் இரு நாட்களாகஅதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.கடந்த 1967ம் ஆண்டு அண்ணா முதல்வராக இருந்தபோது, சிறுதாவூர் கிராமத்தில், 20ஏழை தலித் குடும்பங்களுக்கு தலா 2.5 ஏக்கர் வீதம் 50 ஏக்கர் விவசாய நிலம்இலவசமாக வழங்கப்பட்டது.
இந்த நிலத்திற்கு அருகில் முன்னாள் முதல்வர் ஜெயலிலதா- அவரது தோழி சசிகலாஆகியோர் மாபெரும் பண்ணை வீட்டை கட்டினர்.
இந்த கட்டடப் பணி ஆரம்பித்த நிலையில், தங்கள் நிலத்தில் பயிர் செய்ய முயன்றதலித் மக்களை சசிகலாவின் ஆட்கள் மிரட்டி பயிர் செய்யக் கூடாது என்றும்தடுத்துள்ளனர்.
இதுகுறித்து கலெக்டர், தாசில்தாரிடம் தலித்கள் புகார் கொடுத்தபோது, இந்த நிலம்இப்போது உங்களது பெயரில் இல்லை. வேறு பெயரில் பட்டா மாற்றப்பட்டுவிட்டதாக கூறியுள்ளனர்.
தலித்கள் மேற்கொண்டு விசாரித்தபோது தங்கள் நிலம் சசிகலாவின் பெயருக்குமாற்றப்பட்டதை அறிந்தனர்.
இதையடுத்து தங்கள் நிலத்தை மீட்டுத் தருமாறு அப் பகுதி கம்யூனிஸ்ட் கட்சியினரைதலித்கள் அணுகினர். இதைத் தொடர்ந்து நிலத்தை மீட்டுத் தருமாறு முதல்வர்கருணாநிதிக்கு மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்தது.
மேலும் சசிகலா பெயருக்கு நிலத்தை மாற்றிய அதிகாரிகள் மீது நடவடிக்கைஎடுக்குமாறும் கோரியது.
இதைத் தொடர்ந்து இது குறித்து விசாரிக்க காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டருக்குகருணாநிதி உத்தரவிட்டார்.
இந் நிலையில் செங்கல்பட்டு வட்டாட்சியர் சுப்பிரமணியம் தலையிைல் இருவருவாய் அதிகாரிகள், இரு கிராம அதிகாரிகள் கொண்ட குழு போரூர் பத்திரப் பதிவுஅலுவலகத்தில் கடந்த இரு நாட்களாக ஆய்வு நடத்தி வருகிறது.
கடந்த 40 ஆண்டு ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டு வருகின்றன. தலித்கள் நிலத்தையாருக்காவது விற்றார்களா?, நிலத்தை நேரடியாக சசிகலா வாங்கினாரா, அல்லதுமற்றவர்கள் வாங்கி பின்னர் சசிகலா பெயருக்கு நிலங்கள் மாற்றப்பட்டனவா,அல்லது தலித்கள் விற்காமலேயே அவை சசிகலா பெயருக்கு மாற்றப்பட்டனவாஎன்று விசாரணை நடக்கிறது.
மேலும் ஜெயலலிதாவின் பங்களாவின் நிலமும் அளவெடுக்கப்பட்டு வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications