மருத்துவ உதவி: கருணாநிதிக்கு மதானி நன்றி
கோவை:
தனக்குத் தேவைப்படும் மருத்துவ வசதியை தந்து உதவியதற்காக தமிழக முதல்வர்கருணாநிதிக்கும், இதற்காக கருணாநிதியிடம் பேசிய கேரள முதல்வர்அச்சுதானந்தனுக்கும், கோவை குண்டுவெடிப்பு கைதியான அப்துல் நாசர் மதானிநன்றி தெரிவித்துள்ளார்.
கேரளா மக்கள் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி கோவை குண்டுவெடிப்புவழக்கில் சிக்கி கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.பல்வேறு உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வரும் அவருக்கு உரிய மருத்துவசிகிச்சை அளிக்க உதவ வேண்டும் என்று சமீபத்தில் சென்னைக்கு வந்த கேரளமுதல்வர் அச்சுதானந்தன், கருணாநிதியிடம் கோரிக்கை வைத்தார்.
இதுகுறித்து பரிசீலிக்கப்படும் என கருணாநிதி உறுதியளித்தார். இதைத் தொடர்ந்துசென்னையிலிருந்து மருத்துவர் குழு கோவை சிறைக்கு வந்து மதானியைபரிசோதித்தது. அதன் பின்னர் சிறையிலேயே மதானிக்கு ஆயுர்வேத சிகிச்சைஅளிக்கலாம் என முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி தற்போது மதானிக்கு ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், தனது வழக்கறிஞர் மூலமாக மருத்துவ சிகிச்சைக்கு உதவியதற்காககருணாநிதிக்கும், இதற்காக கருணாநிதியிடம் பேசிய அச்சுதானந்தனுக்கும் நன்றிதெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் மதானி.
அதேபோல தனக்கு சிகிச்சை அளித்து வரும் ஆர்ய வைத்ய பார்மஸி நிறுவனத்திற்கும்அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications