மருத்துவமனையில் நளினி: வைகோ கோரிக்கை
சென்னை - கொழும்பு:
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில அடைக்கப்பட்டுள்ள நளினி மற்றும்முருகன் ஆகியோரின் மகள் ஆரித்ரா, இலங்கையிலிருந்து இந்தியா வருவதற்கு விசாவழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி பிரதமர் மன்மோகன் சிங்குக்குமதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார்.
நளினி, முருகனின் மகள் ஆரித்ரா தற்போது இலங்கையில் உள்ள முருகனின் வீட்டில்இருக்கிறார். யாழ்ப்பாணத்தில் படித்து வரும் அவர் மேல் படிப்பை தமிழகத்தில்தொடர முடிவு செய்தார்.
ஆனால் தமிழகம் வருவதற்கு அவருக்கு விசா கிடைக்கவில்லை. இலங்கையில்உள்ள இந்தியத் தூதரகம் விசா வழங்க மறுத்து விட்டது.
![]() |
இந்த நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பிரதமருக்கு கடிதம்எழுதியுள்ளார். அதில், கடந்த 26ம் தேதி முதல் நளனியும், முருகனும் சிறையில்உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்.
எனவே இந்த விஷயத்தில் தாங்கள் மனிதாபிமான முறையில் தலையிட்டு அரித்ராஇந்தியா வருவதற்கு விசா வழங்க இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகத்திற்குஉத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார் வைகோ.
இதேபோல பிரதமருக்கு அனுப்பியுள்ள இன்னொரு கடிதத்தில், ராமேஸ்வரம்மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர்காயமடைந்துள்ளனர்.
இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுகூறியுள்ளார் வைகோ.
இதற்கிடையே, உண்ணாவிரதம் இருந்து வரும் முருகன், நளினியின் நிலைமோசமடைந்தது. இதையடுத்து இருவரும் வேலூர் அரசு மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தயா மாஸ்டருக்கு மாரடைப்பு:
இதற்கிடையே விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செய்தித் தொடர்பாளர் தயாமாஸ்டருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு கொழும்பு நகரில் சிகிச்சைஅளிப்பதற்கு இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் தயா மாஸ்டர். இவருக்குதிடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில்உள்ள கிளிநொச்சியில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும்மேல் சிகிச்சைக்காக கொழும்பு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக இலங்கை அரசுக்கு புலிகள் தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கைஏற்கப்பட்டது.
இதுகுறித்து இலங்கை அமைச்சரவை செய்தித் தொடர்பாளரும், அமைச்சருமானஅனுராபிரியதர்ஷன யாபா கூறுகையில், முற்றிலும் மனிதாபிமான அடிப்படையில்விடுதலைப் புலிகளின் கோரிக்கையை அதிபர் ராஜபக்ஷே ஏற்றுக் கொண்டார். தயாமாஸ்டருக்கு கொழும்பில் மேல் சிகிச்சை அளிக்கவும் ஒப்புதல் அளித்துள்ளார்.
அனைத்து கருத்து வேறுபாடுகளையும் மறந்து விட்டு, ஒருவருக்கு மருத்துவ உதவிதேவைப்படும்போது அவருக்கு உதவ வேண்டும் என்பது நமது கலாச்சாரம்.அதைத்தான் இலங்கை அரசு தற்போது செய்துள்ளது என்றார் யாபா.
இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் உதவியுடன் கிளிநொச்சியிலிருந்துதயா மாஸ்டர் சாலை மார்க்கமாக கொழும்புக்குக் கொண்டு வரப்பட்டுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இலங்கை ராணுவத்தின் பலத்தபாதுகாப்புடன் தயா மாஸ்டர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு இருதய அறுவைச் சிகிச்சை நடந்துள்ளது.













Click it and Unblock the Notifications