மும்பை மக்களுக்கு சல்யூட்: பிரதமர் உணர்ச்சிமயம்
டெல்லி:
பயங்கரவாத தாக்குதல்கள் மூலம் இந்தியாவை யாரும் பணிய வைத்துவிட முடியாதுஎன்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
![]() |
| மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் நளினி |
மும்பை மற்றும் ஸ்ரீநகரில் நடந்த தொடர் வெடிகுண்டு சம்பவங்களைத் தொடர்ந்துதூர்தர்ஷன் தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உணர்ச்சிகரமாக ஆற்றிய உரை:
அப்போது, மும்பை மற்றும் ஸ்ரீநகரில் வெடிகுண்டு சம்பங்கள் நிடந்த சில மணிநேரங்களிலேயே அங்கு மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டனர். இந்தியமக்களின் உறுதிப் பாட்டை இது எடுத்துக் காட்டுகிறது.
இந்திய மக்களை யாரும் மிரட்டிப் பணிய வைக்க முடியாது என்பதற்கு இதைவிடஉதாரணம் ஏதும் தேவையில்லை. மும்பை மற்றும் ஸ்ரீநகர் மக்களுக்கு நான் சல்யூட்செய்கிறேன். இவ்வளவு விரைவாக இயல்பு நிலைக்குத் திரும்பியதற்காக அவர்களைபாராட்டுகிறேன். தீவிரவாதத்தை துச்சமென மதிக்கும் இந்தியர்களின் உணர்வு இது.
தீவிரவாதிகளின் தாக்குதலால் பாதிக்கப்பட்டு உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும்முடிந்தவரை அத்தனை உதவிகளையும் செய்ய மாநில அரசும், மத்திய அரசும்தயாராக உள்ளன, உறுதியாக உள்ளன.
இந்தியாவின் ஒற்றுமையை வெளிக்காட்டும் விதமாக மும்பை மீண்டும் தலைநிமிர்ந்து நிற்கிறது. இந்தியாவை யாரும் முழங்காலிட்டுப் பணிய வைக்க முடியாதுஎன்பதை மும்பை நிரூபித்துள்ளது.
நமது வளர்ச்சியின் குறுக்கே யாரும் வர முடியாது என்பதை நிரூபித்துள்ளோம்.
மும்பை மக்களின் இந்தத் துயரமான நிமிடங்களில் இந்தியர்கள் அனைவரும்பங்கெடுத்துக் கொள்கிறார்கள். கோழைத்தனமான தீவிரவாதத் தாக்குதலைக் கண்டித்த,அதற்கு எதிராக ஒற்றுமையுடன் திரண்டுள்ள அனைவருக்கும் நான் வணக்கம்செலுத்துகிறேன்.
தீவிரவாதிகளின் கொலை வெறித் தாக்குதலை முறியடித்து இந்தியா வெற்றி பெறும்.இந்தியர்களுக்கே வெற்றி கிடைக்கும். நமது அமைதியையும், வளர்ச்சியையும்குலைக்க நமது நாட்டின் எதிரிகள் நடத்திய முதல் தாக்குதல் அல்ல இது.
இதுபோன்ற எத்தனைத் தாக்குதல்களையும் இந்தியர்கள் சமாளிப்பார்கள்,சந்திப்பார்கள்.
மீண்டும் சொல்கிறேன், இந்தியாவை யாராலும் மண்டியிடச் செய்ய முடியாது.இந்தியாவின் முன்னேற்றத்தை தடுக்கவும் முடியாது. இந்தத் தாக்குதல்களையும் மீறிநாட்டின் பொருளாதார சக்கரம் தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் சுழலும். உலகஅரங்கில் நாடு நிமிர்ந்து நிற்கும்.
துயர சம்பவத்தை எதிர்கொள்வதில் போலீசார், பாதுகாப்புப் படையினர், ரயில்வேஅலுவலர்கள், தீயணைப்பு படையினர், மருத்துவர்கள், அரசு அதிகாரிகள் மற்றும்இதர பலர் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். அவர்களை நான் மனதார பாராட்டுகிறேன்.
இந்த தீவிரவாத சவால்களை எதிர்கொள்ள என்னவெல்லாம் செய்ய வேண்டுமோஅதையெல்லாம் அரசு செய்யும். தீவிரவாதத்திற்கு எதிரான இந்த போரில் நாம் வெற்றிபெறுவோம்.
சகோதர, சகோதரிகளாகிய நீங்கள் தொடர்ந்து அமைதியாக இருக்க வேண்டும்.வதந்திகளை நம்ப வேண்டாம். நம்மை யாரும் பிரித்தாள அனுமதிக்கக் கூடாது.
நமது ஒற்றுமையில் தான் நமது பலம் உள்ளது. ஒரே மக்களாக, ஒரே நாடாக நாம்இணைந்து நிற்போம் என்றார் மன்மோகன் சிங்.
பாக். அமைச்சரின் விஷமப் பேச்சு:
இந் நிலையில் மும்பையில் குண்டு வெடிப்புச் சம்பவத்தை, காஷ்மீர் பிரச்சினையுடன்இணைத்து பாகிஸதான் வெளியுறவு அமைச்சர் குர்ஷித் கசூரி பேசியிருப்பதற்குஇந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மும்பை வெடிகுண்டுச் சம்பவம குறித்து கருத்து தெரிவித்த கசூரி, இந்தியாவுக்கும்,பாகிஸ்தானுக்கும் இடையே நிலவும் காஷ்மீர் உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வுஏற்பட்டால்தான் இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் நிற்கும் என்றுதெரிவித்திருந்தார்.
கசூரியின் பேச்சுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்தியவெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் சர்தேஜ் ரானா கூறுகையில்,
மும்பை குண்டுவெடிப்புச் சம்பவத்தையும், இந்தியா, பாகிஸ்தான் இடையே நிலவும்பிரச்சினைகளையும் இணைத்துப் பேசியுள்ளார் கசூரி. இது வன்மையாககண்டிக்கத்தக்கது. கசூரி கூறுவதைப் பார்த்தால், . காஷ்மீர் பிரச்சனையைத் தீர்க்கஇந்தியா முன் வந்தால்தான் தீவிரவாதத்திற்கு எதிரான போரில் பாகிஸ்தான்ஒத்துழைக்கும் என்று கூறுவதாக அர்த்தம் கொள்ள வேண்டியுள்ளது.
கசூரியின் பேச்சு மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்றார் ரானா.
இதையடுத்து சுதாரித்துக் கொண்ட பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் ஒரு விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், மும்பைகுண்டுவெடிப்புச் சம்பவத்திற்கு அமைச்சர் கசூரி கடும் கண்டனம் தெரிவித்துத்தான்கருத்து தெரிவித்திருந்தார். அவரது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.
மும்பை தாக்குதலையும், காஷ்மீர் பிரச்சினையையும் இணைத்து கசூரி பேசவில்லை,தீவிரவாதத்தை பாகிஸ்தான் பொறுத்துக் கொள்ளாது. தீவிரவாதத்தை ஒழிக்கும்சர்வதேச முயற்சிகளில் பாகிஸ்தான் மன்னணியில் உள்ளது என்றார் அவர்.













Click it and Unblock the Notifications