மும்பை: குஜராத்திகளை குறி வைத்த குண்டுகள்லஷ்கர்-சிமி கூட்டாக நடத்திய ஆபரேசன்
மும்பை:
மும்பை குண்டுவெடிப்புச் சம்பவத்தில் முக்கிய துப்பு துலங்கியுள்ளது.
இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம் என அழைக்கப்படும் சிமி அமைப்புதான்இதை நடத்தியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.காஷ்மீர் தீவிரவாத அமைப்புகளுடன் சேர்ந்து சிமி இந்தத் தாக்குத்லை நடத்தியுள்ளது. குஜராத் கலவரத்துக்குபழிவாங்க துடித்து வரும் இந்த இயக்கத்தினரை காஷ்மீர் தீவிரவாதிகள் பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.
குஜராத்தில் தாக்குதல் நடத்த முயன்று வரும் காஷ்மீர் தீவிரவாத இயக்கங்களுக்கு அந்த மாநிலத்தில் எந்தஅமைப்பும் உதவ முன் வாரத நிலையில், மும்பையில் இத் தாக்குதலை அரங்கேற்றியுள்ளனர்.
குண்டு வெடித்த அடுத்த சில நிமிடங்களில் மும்பை ஜோகேஸ்வரி ரயில் நிலையப்பகுதியில் சிமி அமைப்பைச் சேர்ந்த சிலர் செல்போன் மூலம் பேசிக் கொண்டதகவல்களை உளவுத்துறை அதிகாரிகள் ஒட்டு கேட்டதில் இந்த விவரங்கள்உறுதியாகியுள்ளன.
குஜராத்திகள் அதிகம் வசிக்கும், பயணிக்கும் மும்பை பகுதிகளை தேர்வு செய்து தான் ரயில்களில் குண்டுகள்வைக்கப்பட்டுள்ளன. அதிலும் முதல் வகுப்புப் பெட்டிகளில் தான் எல்லா குண்டுகளும் வைக்கப்பட்டன.
மும்பையில் மிக வசதி படைத்த சமூகங்களில் ஒன்றாக குஜராத்தி சமூகம் திகழ்கிறது. போரிவிலி, ஜோகேஸ்வரிஉள்ளிட்ட பகுதிகளில் பெருமளவில் வசிக்கும் இந்த சமூகத்தினர் பெருமளவில் பயன்படுத்துவது ரயில்களின்முதல் வகுப்புகளைத் தான்.
இதனால் இவர்களுக்கு அதிகபட்ச சேதத்தை உருவாக்கும் திட்டத்துடன் தான் இந்த குண்டுவெடிப்புகளைதீவிரவாதிகள் நடத்தியிருப்பதாக உளவுப் பிரிவினர் சந்தேகிக்கின்றனர்.
3 மாதங்களுக்கு முன்பே தாக்குதல் தொடர்பான திட்டம் தீட்டப்பட்டுள்ளது. எந்தவிதகுற்றப் பின்னணியும் இல்லாத நபர்களை இத்திட்டத்தில் சேர்த்து, யாருக்கும் சந்தேகம்வராதபடி, அவர்கள் மூலம் வெடிகுண்டுகளை ரயில்களில் வைத்துள்ளனர். இந்ததாக்குதலில் சம்பந்தப்பட்ட அனைவருமே மும்பையைச் சேர்ந்தவர்கள்தான் என்றுகருதப்படுகிறது.
இந் நிலையில் சிமி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் பக்கம் போலீசாரின் பார்வை திரும்பியுள்ளது. அவர்களதுசெல்போன்களில் இருந்து சென்ற அழைப்புகளையும், குண்டு வெடிப்பு நடந்த இடங்களுக்கு அருகில் இருந்துஅழைப்புகள் சென்ற செல்போன்களையும் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.
மேலும் குண்டு வெடிப்பில் தப்பியவர்கள் அளித்த தகவல்களை வைத்து, சில சந்தேகமான ஆட்களின்படங்களும் கம்ப்யூட்டர்கள் உதவியோடு வரையப்பட்டுள்ளன.
உளவுப் பிரிவினரும் தீவிரவாதத் தடுப்புப் படையினரும் மகாராஷ்டிரம் முழுவதும் ஆங்காங்கே ரெய்ட் நடத்திவருகின்றனர். இந்த ரெய்ட்களின்போது சில சிமி உறுப்பினர்கள் தலைமறைவாகிவிட்டது தெரிய வந்துள்ளது.அவர்களுக்கு வலை வீசப்பட்டுள்ளது.
ஹோட்டல்கள், விடுதிகள், சந்தேகத்துக்கிடமான இடங்களில் ரெய்ட்கள் நடந்து வருகின்றன.
இதற்கிடையே மும்பை தாக்குதலில் ஆர்டிஎக்ஸ் வெடி பொருள் பயன்படுத்தப்பட்டதும், பென்சில் டைமர்கள்பயன்படுத்தப்பட்டதும் உறுதியாகியுள்ளது.
இந் நிலையில் குண்டு வெடிப்புகளில் பலியானவர்களின் எண்ணிக்கை 198 ஆக உயர்ந்துள்ளது. பலரது உடல்கள்அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்து போய்விட்டதால் அவர்களது உறவினர்கள்மருத்துவமனைகளில் உடல்களை அடையாளம் காண முடியாமல் அழுது கதறி வருகின்றனர்.
மேலும் ரயில்களில் சென்ற பலரைக் காணவில்லை. மும்பை மருத்துவமனைகளில் இவர்களைத் தேடி அலைந்துகொண்டிருக்கிறார்கள் உறவினர்கள். இவர்களது உடல்கள் வெடிகுண்டுகளால் சிதறி துண்டு துண்டாகியிருக்கலாம்என்று கருதப்படுகிறது.
இதனால் அன்றைய தினம் காணாமல் போனவர்கள் உயிரோடு இருக்கிறார்களா, இல்லையா என்று தெரியாமல்பல குடும்பங்கள மும்பையில் உள்ள சிறிய, பெரிய மருத்துவமனைகளில் வார்டு, வார்டாக ஏறி கண்ணீருடன்தேடி வருவது மனதை உருக்குவதாக உள்ளது.












Click it and Unblock the Notifications