டெண்டுல்கருக்கு மீண்டும் இடம் கிடைக்குமா?

Subscribe to Oneindia Tamil

மும்பை:

இலங்கையில் நடைபெறவுள்ள முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்தியகிரிக்கெட் அணி வருகிற 20ம் தேதி தேர்வு செய்யப்படவுள்ளது.

Tendulkar
இலங்கை, இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிகள் பங்கேற்கும்முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெறவுள்ளது.

இதற்கான இந்திய வீரர்களைத் தேர்வு செய்ய 20ம் தேதி மும்பையில் நடைபெறும்கூட்டத்தில் கேப்டன் ராகுல் டிராவிட், தேர்வுக்குழுத் தலைவர் கிரண்மோரே ஆகியோர்உள்பட 5 உறுப்பினர் தேர்வுக் குழு ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதில் அணியின் பயிற்சியாளர் கிரேக் சேப்பல் கலந்து கொள்ள மாட்டார் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியில் மீண்டும் சச்சின் டெண்டுல்கர் இடம்பெறுவாரா என்ற எதிர்பார்ப்புரசிகர்களிடம் உள்ளது. காயம் காரணமாக அணியில் இடம்பெறாமல் இருந்து வரும்சச்சின் லண்டனில் நடந்த சிகிச்சைக்குப் பின்னர் தேறியுள்ளார்.

Tendulkar
லண்டனில் நடந்த சில நல நிதிப் போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பாகவிளையாடினார். 2 சதங்களையும் அங்கு அவர் போட்டார்.

நல்ல பார்மில் உள்ளதாக அவர் கருதினாலும் கூட அவரது உடல் தகுதியைப்பரிசோதித்த பின்னர்தான் அணியில் சேர்ப்பது குறித்து முடிவு செய்ய முடியும் எனஇந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+