மும்பை குண்டு வெடிப்பு: முக்கிய தீவிரவாதி கைது
மும்பை:
மும்பை தொடர் குண்டு வெடிப்பில் தொடர்புடைய தீவிரவாதியை மராட்டிய மாநிலத்தில் உள்ள சாவந்த்வாடாஎன்ற இடத்தில் பிடிபட்டான்.
மும்பை போலீசாருடன் மத்திய உளவுத்துறையும் களத்தில் இறங்கியுள்ளது. மும்பை மற்றும் காஷ்மீரில்தீவிரவாதிகளின் போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதில் மும்பையில் குண்டு வெடித்த சில நிமிடங்களில்அங்கிருந்துசிலர் பாகிஸ்தானுக்கும், வங்காளதேசத்துக்கும் பேசியது தெரிந்தது.அந்தத் தொலைபேசி அழைப்புகள் லஷ்கர்-ஏ-தொய்பா இயக்கத்தின் முக்கியஸ்தர்களுக்கு சென்றதைஇந்தியாவின் வெளிநாட்டு உளவுப் பிரிவான ரா உறுதி செய்துள்ளது. இந்த அழைப்புகளை மேற்கொண்டவர்கள்குஜராத், மராட்டிய மாநில சிமி இயக்கத்தினர் என்றும் தெரியவந்துளிளது.
இதற்கிடையே இந்தத் தாக்குதல் தொடர்பாக நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனைமற்றும் விசாரணையில் 10 பேர் பிடிபட்டுள்ளனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையின் விளைவாக மகாராஷ்டிர மாநிலம் சவந்த்வாடாபகுதியைச் சேர்ந்த பெய்க் என்பவர் சிக்கினான். அவனிடம் ரகசிய இடத்தில் வைத்துவிசாரணை நடக்கிறது.
குண்டு வைத்தவர்கள் என்று சந்தேகிக்கப்படும் மேலும் 2 பேரின் பெயர்களையும் உளவுத் துறையினர்வெளியிட்டுள்ளனர். இவர்களது பெயர் சமியுதீன் அன்சாரி, முகம்மது பயாஸ். இவர்கள்இருவரும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், சிமி அமைப்பின் உறுப்பினர்கள்.
கடந்த மாதம் 26ம் தேதி அன்சாரி வங்கதேசம் சென்று தீவிரவாத தாக்குதல்தொடர்பாக பயிற்சி பெற்றுள்ளான். இதேபோல பயாஸ், கடந்த மாதம் 19ம் தேதிஈரான் சென்றுள்ளான். பின்னர் அன்சாரியுடன் சேர்ந்து பாகிஸதான் சென்றுள்ளான்.
அங்கு லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பு தீவிரவாதிகளிடம் பயிற்சி பெற்று இந்தியாதிரும்பினர். இவர்கள்தான் மும்பை குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்கு முக்கியமூளையாக இருந்தனர் என்று உளவுப்பிரிவினர் சந்தேகிக்கின்றனர்.
இந்த இருவரும் தலைமறைவாகிவிட்டனர். இதற்கிடையே ஒளரங்காபாத்தைச் சேர்ந்த ஒருடாக்டரின் மும்பை வீட்டில் போலீஸார் விடிய விடிய சோதனை நடத்தினர். இந்தசோதனையில் என்ன சிக்கியது என்பதை போலீஸார் தெரிவிக்கவில்லை.
தீவிரவாதிகளை நெருங்கி விட்டதாகவும் விரைவில் பல தகவல்கள் வெளியிடப்படும் என்றும்போலீஸ் தரப்பு நம்பிக்கையுடன் கூறுகிறது.
டெல்லி-வெடிமருந்துகளுடன் தீவிரவாதி கைது:
இந் நிலையில் டெல்லியில் ஆடிஎக்ஸ் வெடிமருந்துடன் வந்த தீவிரவாதியை போலீசார் கைது செய்தனர். மும்பையில் தாக்குதலை தொடர்ந்து டெல்லியில்பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு நகர் முழுவதும் சோதனை நடந்து வருகிறது.
இந் நிலையில் லோடி ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் ஒரு காரை சோதையிட்டபோது அதிலிருந்த பையில் 2 கிலோ ஆர்டிஎக்ஸ்வெடி மருந்து இருந்தது. மேலும் ரூ. 49 லட்சம் பணமும் இருந்தது.
இதையடுத்து காரை ஓட்டி வந்த அஜாய் உசேன் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தை சேர்ந்தவ உசேன் சமீபகாலமாக டெல்லி ஜனக்பூராவில் வசித்து வருகிறான்.
இவனிடம் விசாரணை நடந்து வருகிறது.
பெங்களூரில் தீவிரவாதிகள் ஊடுருவல்?
இதற்கிடையில் மும்பை குண்டு வெடிப்பில் தொடர்புடைய தீவிரவாதிகள் பெங்களூர், ஐதராபாத் நகரங்களுக்கு தப்பி சென்றிருக்கலாம் என்று மத்தியஉளவுத்துறை எச்சரித்துள்ளது.
இதையடுத்து இந்த இரு நகர்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கர்நாடகத்தின் பீதர், குல்பர்கா மாவட்ட எல்லையில் தீவிர வாகனசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.
தகவல் கொடுத்தல் ரூ.25 லட்சம்:
இதற்கிடையே மும்பை ரயில்களில் குண்டு வைத்த தீவிரவாதிகள் பற்றி தகவல் கொடுத்தால் ரூ. 25 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று மராட்டியமாநில துணை முதல்வரும், உள்துறை அமைச்சருமான ஆர்ஆர்.பட்டேல் அறிவித்துள்ளார்
தகவல் கொடுப்பவர்களின் பெயர் விவரம் ரகசியமாக வைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
கோவை-குண்டு, துப்பாக்கியுடன் வாலிபர்:
இதற்கிடையே கோவை ரயில் நிலையத்தில் துப்பாக்கி, துப்பாக்கித் தோட்டாக்கள் மற்றும் வெடிகுண்டுடன் வந்த நபரை போலீஸார் கைது செய்தனர்.
மும்பை வெடிகுண்டு சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், பேருந்து நிலையங்களில் போலீஸார் தீவிரக்கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக கோவையில் பலத்த கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந் நிலையில் நேற்று நள்ளிரவு கோவை ரயில் நிலையத்திற்கு வந்த ஒருவர் மீது சந்தேகம் அடைந்த போலீஸார் அவரை தீவிரமாக சோதனையிட்டனர்.அப்போது அவரிடம் 303 ரக துப்பாக்கி, 2 ரவுண்டு துப்பாக்கித் தோட்டாக்கள், வெடிகுண்டு ஆகியவை இருந்தது தெரிய வந்தது. மேலும் ரூ. 34,000பணமும் இருந்தது.
அந்த நபரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் தான் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும், அங்குள்ள ஆயுதப் படையில்காவலராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இருப்பினும் வெடிகுண்டுடன் அவர் எதற்காக கோவை வந்தார் என்பது குறித்து போலீஸார் தொடர்ந்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.
4 பேரை பிடித்த பயணிகள்:
இதற்கிடையே மும்பை அருகே தானே, பையாந்தர் ரயில் நிலையத்தில் சந்தேகப்படும்படியாக நடமாடிய நான்கு பேரை, ரயில் பயணிகள் பிடித்துபோலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
பையாந்தர் ரயில் நிலையத்தில் (இங்கும் குண்டு வெடிப்பு நடந்தது நனைவிருக்கலாம்) நான்கு பேர் சந்தேகப்படும்படியாக காணப்பட்டனர். அவர்களது கையில்பெரிய பைகளும் இருந்தன. அந்தப் பைகளை ரயில் நிலையத்தில் வைத்து விட்டுச் செல்ல அவர்கள் முயன்றனர்.
இவர்களைப் பார்த்து சந்தகேமடைந்த பயணிகள் அந்த நான்கு பேரையும் மடக்கினர். பின்னர் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
இதற்கிடையேத குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள்மும்பை மால்வானி என்ற பகுதியைச் சேர்ந்தவர்கள்.
இங்கு குடியிருப்பவர்கள் பெரும்பாலும் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இருப்பினும் யாரும் கைது செய்யப்படவில்லை.












Click it and Unblock the Notifications