நான் அவனை அடிப்பேன், அவன் என்னை அடிப்பான்: விஜயகாந்த்
திருச்சி:
திருச்சியில் கூட்ட நெரிசலில் நான் சிக்கியபோது, என்னிடம் அடி வாங்கியது வேறுயாரும் அல்ல, சிறு வயதிலிருந்தே என்னுடன் பழகி வரும் எனது நண்பன் ரவிதான்என்று நடிகர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
திருச்சியில் முகாமிட்டு தர்மபுரி படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் விஜயகாந்த்.நேற்று ஸ்ரீரங்கம் விஸ்வகர்மா காலனி பகுதியில் தீவிபத்து ஏற்பட்டு சில குடிசைகள்சாம்பலாயின.இதைக் கேள்விப்பட்ட விஜயகாந்த் அங்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல்கூறினார்.அப்போது கூட்டத்தினர் முண்டியடித்தபடி விஜயகாந்த்தை நெருங்கி தங்களதுகுறைகளைக் கூற முயன்றனர்.
கூட்ட நெரிசலில் சிக்கிய விஜயகாந்த், கோபமடைந்து, தன்னுடன் வந்திருந்தஉதவியாளர் ஒருவரை பளார் என கன்னத்தில் அறைந்தார்.
இதைப் பார்த்ததும் அந்த நபர் வேகமாக கூட்டத்தை ஒழுங்குபடுத்த ஆரம்பித்தார்.நூற்றுக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் விஜயகாந்த் இப்படி நடந்துகொண்டது சலசலப்பை ஏற்படுத்தியது.
அடி வாங்கியவர் யார் என்ற ஆர்வம் எழுந்தது.
இந்த நிலையில், திருச்சி ராயல் சதர்ன் ஹோட்டலில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தகவுன்சிலர் கிருஷ்ணன் தலைமையில் 2000 பேர் விஜயகாந்த் முன்னிலையில்தேமுதிகவில் இணைந்தனர்.
அப்போது பேசிய விஜயகாந்த், ஒருவரை அழைத்து கூட்டத்தினருக்குஅறிகப்படுத்தினார். இவன் பெயர் ரவி. இவனைத்தான் நான் காலையில் பளார் எனஅறைந்தேன்.
இவன் எனது பால்ய காலத்து நண்பன். சிறு வயதில் இருந்தே ஒன்றாக வளர்ந்தவர்கள்,பழகியவர்கள். நாங்கள் அடித்துக் கொள்வோம், அப்புறம் பிடித்துக் கொள்வோம்.
அவன் என்னை அடிப்பான், நான் அவனை அடிப்பேன். அந்த அளவுக்குஇருவருக்கும் இடையே நெருக்கமான நட்பு உள்ளது. இப்போது வேண்டுமானால்நான் கட்சித் தலைவராகி விட்டதால் அடிக்க இவன் யோசிக்கலாம்.
இது ஒரு சாதாரண விஷயம், நண்பர்களுக்குள் அடித்துக் கொள்வதும், சேர்ந்துகொள்வதும் ரொம்பச் சாதாரணமானது. இதை தேவையில்லாமல் பெரிதுபடுத்திவிட்டார்கள்.
இதற்குக் காரணம் எனது வளர்ச்சியைப் பார்த்து சிலருக்குப் பொறாமைதான் என்றுகூறினார் விஜயகாந்த்.
விஜய்காந்த் பேசுவதைப் பார்த்தால், நான் அவனை திட்டுவேன், அவன் என் குடும்பத்தை பத்தி ரொம்பகேவலமாக திட்டுவான்.. இது எங்களுள்ள ஒரு வெளையாட்டு .. என்று என்னம்மா கண்ணு படத்தில்சத்யராஜிடம் திட்டு வாங்கும் டெலக்ஸ் பாண்டியன் வடிவேலு கோவை சரளாவிடம் சொல்லும் வசனம் தான்நினைவுக்கு வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications