விடுதலை புலிகள் தாக்குதலில் 22 வீரர்கள் பலி!
கொழும்பு:
மட்டக்களப்பில் நடந்த பெரும் தாக்குதலில் இலங்கை கடற்படை வீரர்கள் 22 பேரைவிடுதலைப் புலிகள் சுட்டுக் கொன்றனர்.
கடந்த 2002ம் ஆண்டுக்குப் பிறகு கடற்படை மீது விடுதலைப் புலிகள் மிகப் பெரியதாக்குதலை இன்று நடத்தியுள்ளனர். திரிகோணமலையில் உள்ள கடற்படை முகாம்மீது முதலில் விடுதலைப் புலிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் நான்கு வீரர்களும்,2 விடுதலைப் புலிகளும் கொல்லப்பட்டன்.இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து இலங்கை கடற்படை, மட்டக்களப்புப் பகுதியில்நுழைந்த விடுதலைப் புலிகள் முகாம்களைத் தாக்கத் தொடங்கியது. இப்பகுதிவிடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.
கடற்படை வீரர்களின் தாக்குதலையடுத்து புலிகள் கடும் பதிலடி கொடுத்தனர்.சரமாரியாக குண்டுகளை வீசி கடற்படை வீரர்கள் மீது புலிகள் பெரும் தாக்குதல்நடத்தினர்.
இதில் 22 வீரர்கள் பலியானதாகவும், பல வீரர்களை தாங்கள் சிறைபிடித்துள்ளதாகவும் விடுதலைப் புலிகளின் மட்டக்களப்புப் பிராந்திய தலைவர் கயல்விழியன் தெரிவித்துள்ளார்.
எங்களது பகுதிக்குள் நுழைந்து கடற்படையினர் தாக்குதல் நடத்தினர். இதனால்நாங்கள் பதிலடி கொடுத்தோம். சில வீரர்களையும் நாங்கள் பிடித்து வைத்துள்ளோம்.இதுவரை 22 கடற்படையினரின் உடல்களை மீட்டுள்ளோம் என்று அவர் கூறியுள்ளார்.
கடந்த 2002ம் ஆண்டுக்குப் பிறகு இலங்கை கடற்படை மீது புலிகள் நடத்தியுள்ளமிகப் பெரிய தாக்குதலாக இது கருதப்படுகிறது.
ஆனால் இந்த மோதலில் சில வீரர்கள் மட்டுமே இறந்ததாக இலங்கை கடற்படைசெய்தித் தொடர்பாளர் திசநாயகே கூறியுள்ளார். அவர் கூறுகையில்,திரிகோணமலையில் உள்ள கடற்படை முகாம் மீது புலிகள் குண்டு வீசித் தாக்குதல்நடத்தினர்.
பதிலுக்கு கடற்படையும் தாக்கியது. முன்னதாக காலையில் கடற்படை காக்குள்ஊடுறுவிய விடுதலைப் புலிகள், 2 வீரர்களை சுட்டுக் கொன்றனர் என்றார்.
நேற்று வவுனியவில் தமிழ் ஈழ மக்கள் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும்,விடுதலைப் புலிகளுக்கும் இடையே மோதல் மூண்டது. இதில் தமிழ் ஈழ மக்கள்விடுதலை இயக்கத்தின் மூத்த தலைவர் ரத்தினம் ஸ்ரீகண்டராஜா சுட்டுக்கொல்லப்பட்டார்.
போலீஸ்காரர் விடுவிப்பு: இதற்கிடையே, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிடித்துச்சென்ற ஒரு போலீஸ்காரரை இன்று விடுவிப்பதாக விடுதலைப் புலிகள்அறிவித்துள்ளனர்.
அத்துமீறு விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்குள் நுழைந்ததாக கடந்தசெப்டம்பரில் 3 போலீஸ்காரர்களை புலிகள் பிடித்தனர். அதில் 2 பேரை ஏற்கனவேவிடுவித்து விட்டனர். தற்போது 3வது நபரை விடுவிக்க உள்ளனர்.
விடுதலைப் புலிகளின் செய்தித் தொடர்பாளர் தயா மாஸ்டருக்கு கொழும்பில் சிகிச்சைதர அதிபர் ராஜபக்ஷே முன் வந்ததற்கு நன்றி தெரிவிக்கும் முகமாகவே தங்கள் வசம்உள்ள போலீஸ்காரரை விடுவிப்பதாக புலிகள் கூறியுள்ளனர்.
இதற்கிடையே தயா மாஸ்டர் சிகிச்சை பெற்று வரும் கொழும்பு அப்பல்லோமருத்துவமனையைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தீவிரவாதத்திற்கு எதிரான தேசிய இயக்கம் என்ற அமைப்பின் சார்பில் தயா மாஸ்டரைகைது செய்யக் கோரி பலர் மருத்துவமனை நுழைவாயிலில் தர்ணா போராட்டம்நடத்தினர். இதனால் மருத்துவமனைக்குப் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications