அதிமுக அமைப்பு செயலாளரானார் செம்மலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அதிமுக அமைப்பு செயலாளராக முன்னாள் அமைச்சர் செம்மலை நியமிக்கப்பட்டுள்ளார்.
அதிமுகவில் அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார் ஜெயலலிதா. பல்வேறு மாவட்ட செயலாளர்கள்மாற்றப்பட்டு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முக்கிய நிர்வாகிகளும் மாற்றப்பட்டு வருகின்றனர்.சில காலமாக ஒதுக்கப்பட்டிருந்த முக்கிய பிரமுகர்களுக்கு மீண்டும் கட்சி பொறுப்புகளை வழங்கி வருகிறார்ஜெயலலிதா. அதே போல ஓவர் ஆட்டம் போட்ட ஓ.எஸ்.மணியன் போன்றவர்களுக்கு வால் ஒட்டநறுக்கப்பட்டுள்ளது.
இதுவரை எந்த பொறுப்பும் இல்லாமல் இருந்த முன்னாள் அமைச்சர் செம்மலைக்கு மீண்டும் முக்கிய பொறுப்புவழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக அமைப்பு செயலாளர் பொறுப்பில் முன்னாள்அமைச்சர் செம்மலை இன்று முதல் நியக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடகேட்டுக்கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications