குடியேற்றம்-பிடியை இறுக்கும் மலேசியா
கோலாலம்பூர்:
மலேசியாவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ளவர்களை வெளியேற்ற அந்நாட்டுஅரசு கடும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
மலேசியாவில் முறையான பாஸ்போர்ட், விசா இல்லாமல் ஆயிரக்கணக்கானோர்குடியேறியுள்ளனர். பல்வேறு வேலைகளில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். மொத்தம் 5லட்சம் பேர் இதுபோல சட்டவிரோதமாக மலேசியாவில் தங்கியுள்ளதாககணக்கிடப்பட்டுள்ளது.இவர்களை வெளியேற்ற மலேசிய அரசு புதிய நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகஅந்நாட்டின் பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மலேசிய உள்துறை அமைச்சர் ரஸ்தி ஷேக் அகமது கூறுகையில்,
சட்டவிரோதமாக மலேசியாவில் குடியேறியுள்ளவர்கள் அவர்களது நாட்டுக்குத்திருப்பி அனுப்பபடுவர். அதற்குள் முன்பாக அவர்கள் கைது செய்யப்பட்டுமுகாம்களில் அடைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றார்.
சட்டவிரோதமாக குடியேறியுள்ளவர்களைப் பிடிக்கும் பணிக்காக 1 லட்சம் பேர்கொண்ட மக்கள் தொண்டர் படை அமைக்கப்பட்டுள்ளது.
இவர்களும், காவல்துறை மற்றும் குடியேற்றத்துறை அதிகாரிகள் இணைந்துஇவர்களை கண்டுபிடித்துக் கைது செய்யும் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.
கைது செய்யப்படுபவர்களை அடைக்க புதிய முகாம்கள் அமைக்கப்படவுள்ள.சட்டவிரோதமாக மலேசியாவில் புகுந்துள்ளவர்கள் பெரும்பாலும் கட்டுமானம்மற்றும் தோட்டங்களில்தான் வேலை பார்த்து வருகிறார்கள்.
இவர்களில் பலர் பல்வேறு குற்றச் செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
கடந்த 2005ம் ஆண்டு முதல் இதுவரை 4 லட்சம் பேர் அவர்களது நாடுகளுக்குதிருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களில பெரும்பாலானவர்கள் இந்தோனேசியநாட்டைச் சேர்ந்தவர்கள். முறைகேடாகக் குடியேறிய மேலும் 5 லட்சம் பேர்மலேசியாவிலேயே உள்ளனர்.
முறையான வேலை அனுமதியுடன், கிட்டத்தட்ட 10.8 லட்சம் பேர் மலேசியாவில்வேலை பார்த்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications