நெடுமாறன் மீதான பொடா வழக்கு வாபஸ்!
சென்னை:
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறனை விடுவித்து பொடா மறுஆய்வுக்குழு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து கடந்த அதிமுக அரசு தாக்கல் செய்திருந்தமேல் முறையீட்டு மனுவை தமிழக அரசு வாபஸ் பெற்றது.
பழ.நெடுமாறன், சுபரவீரபாண்டியன், தாயப்பன், ஷாகுல் ஹமீது ஆகியோர் மீதுகடந்த 2002ம் ஆண்டு பொடா வழக்கு தொடரப்பட்டு அவர்கள் கைதுசெய்யப்பட்டார்கள். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதற்காக நான்குபேரும் கைது செய்யப்பட்டனர்.பின்னர் நான்கு பேரும் ஜாமீனில் விடுதலையாகி வந்தனர். இவர்கள் மீதான பொடாவழக்கை பரிசீலனை செய்த பொடா மறு ஆய்வுக் குழு, கடந்த 2005ம் ஆண்டு ஏப்ரல்15ம் தேதி, நான்கு பேரையும் விடுதலை செய்யலாம் என உத்தரவிட்டது.
இதை எதிர்த்து அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில்,சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது தமிழகஅரசு.
இந்த மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ரவிராஜபாண்டியன், முன்பு ஆஜரான அரசு வழக்கறிஞர் ராஜா கலிபுல்லா இந்த மனுவைதமிழக அரசு திரும்பப் பெறுவதாக தெரிவித்து அதற்கான மனுவைத் தாக்கல்செய்தார்.
இதையடுத்து மேல் முறையீட்டு மனுவை நீதிபதி ரவிராஜ பாண்டியன் தள்ளுபடிசெய்தார்.
இதைத் தொடர்ந்து நெடுமாறன் உள்ளிட்டோர் மீதான பொடா வழக்கு முடிவுக்குவந்துள்ளது. இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நெடுமாறன் உள்ளிட்டவர்கள்கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்தனர் என்பதுநினைவிருக்கலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications