என்னைப் பற்றி வீண் புரளி: வைகோ எரிச்சல்
சென்னை:
என்னை விடுதலைப் புலிகள் அமைப்பினர் வந்து சந்தித்ததாக, அரசியல்காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் வேண்டும் என்றே திட்டமிட்டு புரளி கிளப்பியுள்ளனர்என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
சமீபத்தில் வைகோ கேரளாவுக்குச் சென்றிருந்தார். அங்கு ஆயுர்வேத சிகிச்சைஎடுத்துக் கொள்வதற்காக அவர் சென்றிருந்ததாக கூறப்பட்டது.ஆனால் வைகோவை விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த சிலர் வந்துசந்தித்ததாக செய்திகள் வெளியாகின. இந்த செய்தியை மதிமுக மறுத்தது.
இந்த நிலையில், வைகோ அளித்துள்ள ஒரு பேட்டியில், நான் விடுதலைப் புலிகளைரகசியமாக சந்திக்க மாட்டேன். சந்திக்க நினைத்தால் வெளிப்படையாகவே செய்வேன்என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து வைகோ கூறுகையில், உற்சாகம், புதுப்பொலிவும் பெற, மூலிகைசிகிச்சைக்காக கேரளாவில் உள்ள கோட்டக்கல் ஆர்ய வைத்திய சாலைக்குசென்றிருந்தேன். அப்போது என்னை விடுதலைப் புலிகள் சந்தித்தாகவும்,உளவுத்துறை விசாரித்து வருவதாகவும் திட்டமிட்டே புரளி கிளப்பினர்.
இதுகுறித்து போலீஸார் என்னைப் பற்றி விசாரித்திருக்கிறார்கள். என்னிடம் வந்துபோலீஸ் பாதுகாப்பு வேண்டுமா என்றார்கள். ஆனால் வேண்டாம் என்று நான் கூறிவிட்டேன்.
நான் ஆண்டன் பாலசிங்கத்தைச் சந்தித்தபோது அதை வெளிப்படையாக சொன்னேன்.அதேபோல, புலிகளை நான் சந்திக்க நினைத்தால் அதை வெளிப்படையாகவேசெய்வேன். மறைக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.
ஈழத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பிரச்சினை உள்ளது. அங்கு தமிழர்களுடையஉரிமை பறிக்கப்படுகிறது. தமிழினத்தை ஆயுதப் போராட்டம்தான் காத்து வருகிறது.அவர்களது போராட்டத்தில் நியாயம் இருக்கிறது.
அதனால் தான் புலிகளை நாங்கள் ஆதரிக்கிறோம். என் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சிகாரணமாக வீண் புரளியை சிலர் கிளப்பி விடுகிறார்கள்.
இந்த பிரச்சினை தொடர்பாக எங்களுக்கும், அதிமுகவுக்கும் இடையே எந்தவிதமானபிரச்சினையும் ஏற்படவில்லை. இது மகிழ்ச்சிக் கூட்டணி என்றார் வைகோ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications