திருச்சி பிஇ மாணவி படுகொலை-கொலை செய்தகாதலன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை
திருச்சி:
தஞ்சை அருகே பொறியியல் கல்லூரியில் படித்து வந்த சென்னை மாணவி படுகொலைசெய்யப்பட்டார். அவரைக் கொலை செய்து விட்டுத் தலைமறைவான காதலன் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த சுந்தரராஜன் என்பவரின் மகள் ரம்யா (20). இவர்தஞ்சை மாவட்டம் வல்லம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ.3ம் ஆண்டு படித்து வந்தார்.
திருச்சியைச் சேர்ந்த பி.இ.எல். ஊழியரின் மகன் விவிலியன் ரிச்சர்ட் (21). இவர் அதேகல்லூரியில் பி.டெக் 4ம் ஆண்டு படித்து வந்தார். ரம்யாவும் ரிச்சர்டும் காதலித்துவந்துள்ளனர்.
![]() |
இதனால் ஆத்திரமடைந்துள்ளார் ரிச்சர்ட். ரம்யாவை பழி தீர்க்க காத்திருந்தார்.
இந் நிலையில் நேற்று காலை தனது பெற்றோரிடம், உங்களை கல்லூரி முதல்வர்சந்திக்க விரும்புகிறார் என ரிச்சர்டு கூறியுள்ளார். அவர்களை கல்லூரிக்கு அனுப்பிவிட்டு ரிச்சர்டு வீட்டிலேயே இருந்துள்ளார்.
கல்லூரிக்குச் சென்ற பெற்றோர் வீடு திரும்பினர். இருவரும் வீடு திரும்பியபோது ரிச்சர்ட் அங்குஇல்லை. வெளியில் சென்றிருப்பார் என அவர்கள் நினைத்திருந்தனர். இரவும் அவர் வீடு திரும்பவில்லை.இதனால் பெற்றோர் குழப்பமடைந்தனர்.
இந் நிலையில் மாலையில் தனது செல்போன் மூலம் பெற்றோரைத் தொடர்பு கொண்ட ரிச்சர்ட், நான் ரம்யாவைக்கொலை செய்து விட்டேன். அவளது உடலை நம் பெட்ரூமில் கட்டிலுக்கு அடியில் போட்டுள்ளேன். நானும்இனிமேல் வீட்டுக்கு வர மாட்டேன், நான் விஷம் குடித்துவிட்டேன் என்றும் கூறியுள்ளார்.
அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கட்டிலுக்கு அடியில் பார்த்தபோது ரம்யா ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார்.அவரது காது கிழிந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. இதையடுத்து உடனடியாக போலீசாரைஅவர்கள் தொடர்பு கொண்டனர். கழுத்தை பெல்ட்டால் இறுக்கியும், கத்தியால்குத்தியும் அவரை ரிச்சர்ட் கொலை செய்துள்ளார்.
விஷம் குடித்து விட்டதாக தொலைபேசியில் கூறிவிட்டு தலைமறைவான ரிச்சர்ட்டைபோலீசார் பல இடங்களிலும் தேடினர்.
இந் நிலையில் உளுந்தூர்ப்பேட்டை அருகே ஒரு வாலிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாகதகவல் வரவே திருவெறும்பூர் போலீஸார் அங்கு விரைந்தனர்.
அங்கு உடல் சின்னபின்னாவாகி மாணவர் ரிச்சர்ட் இறந்து கிடந்தார். ரம்யாவைக் கொன்ற பின்னர் தப்பியரிச்சர்ட் பஸ் மூலம் சென்னைக்கு கிளம்பியுள்ளார். இன்று பகல் 12 மணியளவில் உளுந்தூர்பேட்டையில் ரயில்வேகேட் மூடப்பட்டிருந்ததால் பஸ் நின்றது. அப்போது அதிலிருந்து இறங்கிய ரிச்சர்ட், எக்ஸ்பிரஸ் ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந் நிலையில் ரிச்சர்டின் வீட்டில் இருந்து அவரது டைரி, காதல் கடிதங்களை போலீசார் கைப்பற்றினர். டைரியில்,மற்ற மாணவர்களோடு ரம்யா பழகுவது எனக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் என் காதலுக்கு முட்டுக்கட்டைபோடுகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் ரம்யாவை அவர் ஒருதலையாகவே காதலித்திருக்கலாம்என்றும் கருதப்படுகிறது.
ரம்யாவின் உடலைப் பெற வந்த அவரது தந்தை சுந்தர்ராஜ் கூறுகையில், தன்னை காதலிக்க சொல்ல ரிச்சர்ட்தொல்லை தருவதாக ரம்யா என்னிடம் கூறினாள். நீங்களே அவனிடம் பேசுங்கள் என்று சொல்லி ரிச்சர்டின்நம்பரையும் தந்தாள். நானும் அவனை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினேன்.
நீங்கள் கிருஸ்தவர், நாங்கள் இந்து. இந்தக் காதல் சரி வராது என்று சொன்னேன். என் மகளை தொந்தரவுசெய்யாதே என்றேன் என்றார்.
இதன் பின்னர் தான் ரம்யாவை தனது வீட்டுக்கு வரவழைத்து கொலை செய்துள்ளார் ரிச்சர்ட். ரம்யா ஏன் ரிச்சர்ட்வீட்டுக்கு வந்தார் என்பதில் குழப்பம் நிலவுகிறது. தற்கொலை செய்வேன் என்று மிரட்டி வரவழைத்திருக்கலாம்என்று போலீசார் கருதுகின்றனர்.
வீட்டுக்கு வந்த ரம்யாவுடன் பேசும்போது வாக்குவாதம் ஏற்பட்டிருக்கலாம், இதனால் கொலை செய்திருக்கலாம்.அல்லது அவருடன் செக்ஸ் உறவு கொள்ள ரிச்சர்ட் முயன்று அதை ரம்யா தடுத்து பிரச்சனையாகி அவரைகொன்றிருக்கலாம் என போலீசார் கூறுகின்றனர். ரம்யாவின் உடல் பரிசோதனைக்குப் பின்பே எதுவும்தெளிவாகத் தெரியவரும்.













Click it and Unblock the Notifications