சென்னை உயர்நீதிமன்றம்-அடுத்தவாரம் 5 புதிய நீதிபதிகள் பதவியேற்பு
சென்னை:
சென்னை உயர் நீதிமன்றத்தில் 5 புதிய நீதிபதிகள் அடுத்த வாரம் பதவி ஏற்கின்றனர்.
புதிய நீதிபதிகளாக கே.வெங்கட்ராமன், கே.சந்துரு, வி.ராமசுப்பிரமணியம், எஸ்.மணிக்குமார், ஏ.செல்வம்ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு ஜனாதிபதியால் வெளியிடப்படும். இதைத் தொடர்ந்து அடுத்த வாரம்நீதிபதிகளாக பதவி ஏற்றுக் கொள்வார்கள்.
இதில் கே.வெங்ட்ராமன், சென்னையைச் சேர்ந்தவர். சென்னை சட்டக் கல்லூரியில் படித்தவர். 1973ம் ஆண்டுவழக்கறிஞராக உள்ளார். சிவில், ரிட் வழக்குகளில் நிபுணத்துவம் பெற்றவர்.
கே.சந்துரு, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர். ராவ் அண்டு ரெட்டி சட்ட அலுவலகத்தில் ஜூனியர் வக்கீலாக பணியைத்தொடங்கியவர். தொழிலாளர்கள் பிரச்னை, பொடா வழக்குகளில் ஆஜாரகி வாதாடியுள்ளார்.
வி.ராமசுப்பிரமணியம், மன்னார்குடியில் பிறந்தவர். சென்னை சட்டக் கல்லூரியில் பிஎல் முடிந்து 1983 முதல்வக்கீலாக பணியாற்றி வருகிறார். மத்திய, மாநில நிர்வாக தீர்ப்பாயங்களில் முக்கிய வழக்குகளில் ஆஜராகிவாதாடியுள்ளார்.
எஸ்.மணிக்குமார், சென்னையைச் சேர்ந்தவர். இவரது தந்தை சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகே.சாமிதுரை. 22 வருட வக்கீல் அனுபவம் பெற்றவர். தந்தையிடம் ஜூனியர் வக்கீலாக பணியை தொடங்கி1989ம் ஆண்டு மாநில நிர்வாக தீர்ப்பாயத்தில் அரசு வக்கீலாக நியமிக்கப்பட்டார். மத்திய அரசின் உதவிசொலிசிட்டர் ஜெனரலாக பணியாற்றியுள்ளார்.
ஏ.செல்வம், சிவகங்கை மாவட்டம் பூலாங்குறிச்சியைச் சேர்ந்தவர். மதுரை சட்டக் கல்லூரியில் பிஎல் பட்டம்பெற்றவர். 25 ஆண்டுகளாக வக்கீலாக இருக்கிறார். 1986ல் நீதித்துறை முன் சீப்பாக நியமிக்கப்பட்டார். 1989ல்உதவி நீதிபதியானார். 1997ம் ஆண்டு மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2005ம் ஆண்டு முதல் சென்னைஉயர்நீதிமன்ற விஜிலன்ஸ் பதிவளராக உள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications