காவல் நிலையத்தில் கதறி அழுத நிர்மலா!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

துணை வேந்தர் ராஜனின் மருமகள் மதுதேவி தற்கொலை வழக்கில் நேற்று ஜாமீன் பெற்ற நடிகை நிர்மலாநீதிமன்ற உத்தரவுப்படி இன்று காலை அடையாறு காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார்.

Nirmala
ராஜனின் மகன் நவீன்குமாருடன் நிர்மலா தொடர்பு வைத்திருந்ததால் மதுதேவி தற்கொலை செய்து கொண்டார்.இந்த வழக்கில் தேடப்பட்ட நிர்மலா, முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துவிட்டு தலைமறைவானார்.

அவருக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் அளித்துள்ளது. இதன்படி மூன்று நாட்கள் அடையாறுகாவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும், போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்.

இந் நிலையில் இன்று காலை காவல் நிலையத்துக்கு வந்தார் நிர்மலா. நேற்று நீதிமன்றத்துக்கு பர்தா அணிந்துவந்த நிர்மலா இன்று கருப்பு-வெள்ளை சேலையில் பந்தாவாக வந்தார்.

உதவி கமிஷ்னர் ஹரியின் அறைக்குச் சென்று கையெழுத்திட்ட நிர்மலாவிடம் 28 கேள்விகள் அடங்கிய தாள்தரப்பட்டது. அதிலிருந்த கேள்விகளை உதவி கமிஷ்னர் கேட்க, பதற்றமும் கண்ணீருமாக பதில் தந்தார்.

பல கேள்விகளுக்கு பதிலளிக்க விரும்பவில்லை என்றே பதில் தந்த நிர்மலாவிடம் நவீன்குமாருடனான நட்புகுறித்து போலீசார் கேட்டபோது,

ஒரு டிவி நடிகை என்ற முறையில் எனக்கு நட்புரீதியிலும் தொழில்ரீதியிலும் நிறைய ஆண், பெண் நண்பர்கள்உண்டு. டிவி தொடர் தயாரிப்பாளர் என்ற முறையில் தான் நவீன் குமாரை எனக்குத் தெரியும். அவர் எனக்குபணமோ, நகையோ தரவில்லை என்று சொல்லிவிட்டு கதறி அழுதார் நிர்மலா.

ஆனாலும் அவரை விடாத போலீசார் தொடர்ந்து துருவினர். காலை 10.30 முதல் 12.30 வரை விசாரணைநடந்தது. அப்போது பெண் எஸ்ஐயும் நிர்மலாவின் வழக்கறிஞரும் உடனிருந்தனர்.

காவல் நிலையத்துக்கு பந்தாவாக வந்த நிர்மலா திரும்பிப் போகையில் பேயறைந்தது மாதிரி காணப்பட்டார்.

முன்னதாக போலீசாரிடம் நிர்மலா ஒரு புகார் தந்தார். அதில்,

நான் நேற்று நீதிமன்றத்துக்கு சென்றபோது போட்டோ எடுப்பதற்காக சிலர் (பத்திரிக்கையாளர்கள்) நான்அணிந்திருந்த பர்தாவை பிடித்து இழுத்தனர். என்னிடம் அநாகரீகமாகவும் என் புகழுக்கு இழுக்கு ஏற்படும்வகையிலும் நடந்து கொண்டும்.

Nirmala with her Lawyer
நேற்று நீதிமன்றத்தில் நிர்மலா

இன்றும் நான் காவல் நிலையத்துக்குள் நுழைந்தபோதும் குறுக்கே பாய்ந்து என்னை படம் பிடித்தனர். அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் நிர்மலா கூறியிருந்தார்.

அதை வாங்கிய உதவி கமிஷ்னர், போட்டோ எடுப்பது பத்திரிக்கையாளர்களின் வேலை. அதில் போலீசார்எல்லாம் தலையிட முடியாது என்று கூறி புகாரை திரும்ப அவரிடமே தந்துவிட்டார்.

நவீன்குமார் நகை தரவில்லை என்று நிர்மலா கூறினாலும், அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில்மதுதேவியின் நகைகள் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

மேலும் தனது நினைத்தபோதெல்லாம் செக்சும் சுகமும் தந்த நிர்மலாவுக்கு நான் என் மனைவியின் நகை,பணத்தை அள்ளித் தந்தேன் என நவீன்குமாரும் வாக்குமூலம் தந்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+