சிவாஜி சிலையைத் திறக்க தடை இல்லை!
சென்னை:
மெரீனா கடற்கரையில் காந்தி சிலைக்கு எதிரே சிவாஜி கணேசன் சிலையைவைப்பதற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. இந்த வழக்குவிசாரணை அடுத்த மாதம் 21ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
சென்னை கடற்கரையில், டிஜிபி அலுவலகம் அருகே, காந்தி சிலைக்கு எதிரே நடிகர்திலகம் சிவாஜியின் சிலையை வைக்க தமிழக அரசு முடிவு செய்தது. பீடம்கட்டப்பட்டு அதன் மேல் சிலையும் நிறுவப்பட்டு விட்டது.இந்த நிலையில் காந்தி சிலைக்கு அருகே சிவாஜி சிலையை வைக்கக் கூடாது என்றுஎதிர்ப்பு தெரிவித்து சீனிவாசன் என்ற தியாகி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தார். இதுதொடர்பாக கடந்த 3 நாட்களாக பரபரப்பான விவாதம்நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த நிலையில், நேற்றும் இந்த வழக்கில் வாதம் நடந்தது. அதன் பின்னர் தலைமைநீதிபதி ஏ.பி.ஷா கூறுகையில், சிலைகள் அமைப்பது தொடர்பாக தமிழக அரசுஉச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே உறுதிமொழி அளித்துள்ளது.
இப்போது சிவாஜி சிலையை வைக்க அனுமதி அளித்தால், அதை மீறுவதாகஅமையும். எனவே உச்சநீதிமன்றத்தின் அனுமதியுடன் சிலையை வைப்பது நல்லது.
இருந்தாலும், சிலை திறப்பு விழாவைத் தடை செய்ய நாங்கள் விரும்பவில்லை. இதுஒரு அரசின் நடவடிக்கை. சிலையைத் திறந்து விட்டு, பின்னர் ஏதேனும் விளைவுகள்ஏற்பட்டால் அதற்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்.
விழுப்புரத்தில், சாலையின் குறுக்கே மேடை போடுவதை எதிர்த்து தொடரப்பட்டவழக்கில், போக்குவரத்தை பாதிக்கும் வகையில் சாலையின் குறுக்கே எந்தவிதமானகட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளப்பட மாட்டாது என்று உச்சநீதிமன்றத்தில்தமிழக அரசு உத்தரவாதம் கொடுத்துள்ளது.
அது சென்னைக்கும் பொருந்தும். எனவே, இந்த வழக்கு ஆகஸ்ட் 21ம் தேதிக்குதள்ளிவைக்கப்படுகிறது. சிலையைத் திறந்து கொள்ளளாம். ஆனால் அதனால்ஏற்படும் பின் விளைவுகளுக்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்.
தமிழக அரசின் நடவடிக்கைகள், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு கட்டுப்படுவதாகஇருக்கும் என்று தீர்ப்பளித்தார் தலைமை நீதிபதி.
இந்த உத்தரவையடுத்து வருகிற 21ம் தேதி சிவாஜி கணேசன் சிலை திட்டமிட்டபடிதிறக்கப்படவுள்ளது.
சிலை பகுதியை பார்வையிட்ட கருணாநிதி:
வழக்கு விசாரணையில் இருந்தபோதே, முதல்வர் கருணாநிதி சிவாஜி சிலைஅமைக்கப்பட்டுள்ள இடத்திற்கு அதிகாரிகளுடன் வந்தார். பந்தல் எப்படிப் போடவேண்டும் என்பது குறித்து அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
காந்தி சிலையை பந்தல் மறைக்கும் வகையில் இருக்கக் கூடாது என்றும் அவர்அறிவுறுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், திட்டமிட்டபடி 21ம்தேதி சிவாஜி சிலை திறக்கப்படும். உயர்நீதிமன்றம் கூறுவது போல நடந்துகொள்வோம் என்றார்.
21ம் தேதி மாலை 6.30 மணிக்கு சிலை திறப்பு விழா நடைபெறுகிறது. இதற்கானஅழைப்பிதழ்கள் விநியோகிக்கும் பணி தொடங்கி விட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications