இலங்கை: ரேடார்களை திரும்ப பெறுக-வைகோ
சென்னை:
இலங்கை ராணுவத்துக்கு வழக்கிய ரேடார் கருவிகளை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று மதிமுகபொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங்கை டெல்லியில் சந்தித்த அவர் இதற்கான கடிதத்தைக் கொடுத்தார். அதில் அவர்கூறியிருப்பதாவது,இலங்கை விமானப்படைக்கு ரேடார் கருவிகளை இந்தியா அளித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அவற்றைஉடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால் தமிழர்கள் மீது விமானத் தாக்குதல் நடத்தும் சிங்களஅரசுக்கு இந்தியா உதவி செய்கிறது என்ற குற்றச்சாட்டு வரும்.
இலங்கைக்கு எந்தவிதமான ராணுவ உதவியையும், ஆயுத விற்பனையையும் செய்வது இல்லை என்று 1999ல்அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இந்திய அரசு எடுத்த முடிவை உறுதியாகவும், உண்மையாகவும் செயல்படுத்தவேண்டும் என அந்தக் கடிதத்தில் வைகோ கூறியுள்ளார்.
மேலும், தமிழகத்தில் கொலை வழக்கில் தொடர்புடைய ஒருவர், சிங்கள அரசின் பிரதிநிதியாக இந்தியாவுக்குவந்து பாதுகாப்பு ஆலோசகரை சந்தித்துப் பேச அனுமதித்திருப்பது குறித்து பிரதமரிடம் வைகோ கண்டனம்தெரிவித்தார். அதுபற்றி விசாரிப்பதாக மன்மோகன் உறுதி அளித்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் சிறைகளில் இருக்கும் முருகன், நளினிதம்பதியின் மகள் அரித்ரா இந்தியா வந்து பெற்றோரைச் சந்திக்கவும், இங்கு கல்வி பயிலவும் இந்திய அரசு விசாஅளிக்க வேண்டும் என்றும் பிரதமரிடம் வைகோ கேட்டுக் கொண்டார். அதுபற்றி கவனிப்பதாக பிரதமர்கூறியதாக மதிமுக வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
பிரதமரைச் சந்தித்த பின் அவரது பாதுகாப்பு ஆலோசகர் எம்கே நாராயணனை சந்தித்த வைகோ இலங்கைநிலவரம் பற்றி பேசினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications